உரங்கள் (Fertilizer) உள்ளிட்ட பொருட்களை தயாரிக்க, பசுஞ்சாணத்தை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது, என, மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.
பசுஞ்சாணத்தில் உரம்:
ம.பி.,யில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தலைநகர் போபாலில் கால்நடை மருத்துவர்கள் சங்கம் சார்பில் 'ஷக்தி ௨௦௨௧ (Sakthi 2021)' என்ற தலைப்பில் மாநாடு நடந்தது. இதில் சிவ்ராஜ் சிங் சவுகான் பேசியதாவது: பசுவிடமிருந்து கிடைக்கும் அனைத்தும் மருத்துவக் குணம் மிக்கவை. பசுவின் சாணம், சிறுநீரிலிருந்து உரங்கள், பூச்சி மருந்துகள், மருந்துகள் உள்ளிட்ட பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
மாநில அரசு சார்பில் உரங்கள் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்க பசுஞ்சாணத்தை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. கால்நடைகள் பல்வேறு நோய்களின் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இவற்றை தடுக்க, ஆம்புலன்ஸ் சேவை (Ambulance Service) துவக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று அவர் பேசினார்.
மேலும் படிக்க
கால்நடைகளில் கோமாரி நோயைக் கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை!
Share your comments