மாடுகளைத் தாக்கும் நோய்களில் முக்கியமானதாகக் கருதப்படும் மடிநோய்க்கு இயற்கை முறையில் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள் (Ingredients)
சோற்றுக்கற்றாழை - 250 கிராம்,
மஞ்சள் - 50 கிராம்
(கிழங்கு அல்லதுபொடி,)
சுண்ணாம்பு - 15 கிராம்,
எலுமிச்சை - 2,
வெல்லம் -100 கிராம்
தயாரிப்புமுறை (Preparation)
முதல் மூன்று பொருட்களையும் சேர்த்து சிவப்பு பசைபோல, அரைத்துக்கொள்ளவும். இரண்டு எலுமிச்சையையும் இரண்டாக நறுக்கவும்
பயன்படுத்தும் முறை (Using Method)
-
அரைத்த கலவையை ஒரு கையளவு எடுத்து அதனுடன் 150-200 மிலி தண்ணீர் சேர்த்துக் கலக்கவும் மடியைக் கழுவி சுத்தம் செய்து, மடி முழுவதும் கலவையைத் தடவி விடவும்.
-
மீண்டும் இதே முறையை என நாள் ஒன்றுக்கு,10 தடவை வீதம், 5நாட்களுக்கு செய்ய வேண்டும்.
-
தினமும் இரண்டு எலுமிச்சையை ஒரு நாளுக்கு இருமுறை வீதம் 3 நாட்களுக்குக் கொடுக்கவும்
-
பாலில் இரத்தம் வந்தால் மேற்கண்டவற்றுடன், இரண்டு கைப்பிடி கருவேப்பிலை மற்றும் வெல்லம் இரண்டையும் பசையாக அரைத்து, வாய் வழியாக ஒரு நாளுக்கு இரண்டுமுறை நிலைமை சீரடையும் வரை கொடுக்கவும்.
-
இந்த மருந்து மடிநோய்க்கு நல்ல பலனைக் கொடுக்கும்.
மேலும் படிக்க...
கால்நடைத் தீவனங்களுக்கு பூஞ்சான் நச்சு பரிசோதனை அவசியம்!
கால்நடைகளை கட்டிப்போடாமல், மேய்ச்சலுக்கு விடும் இடம் எது தெரியுமா?
Share your comments