சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே பொன்னாங்குடியில் தனது கன்றை எடுத்துச் சென்ற காரை 3 கி.மீ. பின் தொடர்ந்து தாய்ப்பசு சென்றது. கண்டரமாணிக்கத்தைச் சேர்ந்தவர் சின்னராஜா, MBA பட்டதாரி. இவரது குடும்பத்திற்கு பொன்னாங்குடியில் தோட்டம் உள்ளது. முழுநேர விவசாயி ஆக உள்ளார். விவசாயத்துடன் பால்மாடுகளும் வளர்க்கிறார். இவரது பசுக்கள் கன்று ஈனும் தருணத்தில் தோட்டத்தில் நிறுத்தி வைப்பதும், கன்று ஈன்ற பிறகு கன்றை வீட்டிற்கு கொண்டு வந்து பராமரிப்பதும் வழக்கமாக வைத்துள்ளார்.
பின் தொடர்ந்த தாய்ப்பசு (Mother Cow Following)
நேற்று முன்தினம் இரவு தோட்டத்தில் ஒரு பசு கன்று ஈன்றது. அதை நேற்று காலையில் பார்த்த சின்னராஜா, கன்றால் நடக்க முடியாது என்பதால் அதற்கான உணவு அளித்துள்ளார். பின்னர் 3 கி.மீ.துாரத்திலுள்ள வீட்டிற்கு தனது காரின் டிக்கியில் கன்றை எடுத்துச் செல்ல முடிவு செய்தார். தாயார் அழகம்மையை காரின் டிக்கியில் கன்றுக்குட்டியுடன் உட்கார வைத்தார். பின்னர் தாய்ப்பசுவை காரின் பின்புறம் நிறுத்தினார்.
தொடர்ந்து காரை மெதுவாக ஓட்டினார். கன்றை எடுத்துச் செல்வது அறிந்த பசு காரை பின் தொடர்ந்தது. கன்றை ஈன்ற பசு என்பதால் சின்னராஜா பசுவின் வேகத்திற்கேற்ப காரை ஓட்டினார். 3 கி.மீ. துாரத்தை கடக்க 90 நிமிடங்கள் எடுத்துக் கொண்டார்.
தற்போது சின்னராஜா வின் வீட்டில் கன்றுடன் தாய்ப்பசு நலமாக உள்ளது. கன்றைத் தொடர்ந்த பசுவின் தாய்ப்பாசமும், பசுவை மனிதாபிமானத்துடன் நடத்திய பசுவின் உரிமையாளரையும் அப்பகுதியினர்
பாராட்டினர்.
மேலும் படிக்க
தென்னீரா பானம் பொருளாதார புரட்சி ஏற்படுத்தும்: உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் நம்பிக்கை!
Share your comments