கால்நடைகளின் மேய்ச்சலுக்காக, புலம் பெயர்ந்து வசிக்கும் கிராமத்தினர், அந்த கால்நடைகளை விற்பனை செய்யாமல், தங்களின் மகளுக்கு, சீதனமாக வழங்கும் அவர்களின் குல வழக்கம் இன்னமும் வழக்கத்தில் உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அடுத்த, புதுார்மேடு கிராமத்தில், திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில், நான்கு குடும்பத்தினர், வசித்து வருகின்றனர். இவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம், உளியமங்கலம் கிராமத்தில் இருந்து இங்கு புலம்பெயர்ந்து வந்தவர்கள்.
பூம்பூம் மாடுகள் ('Boom Boom' cows)
கடந்த, 50 ஆண்டுகளாக, இங்கு வசிக்கும் இவர்களின் வாழ்வாதாரம் மாடுகள் மட்டுமே. பூம்பூம் மாடுகள் எனப்படும் நாட்டு இன காளைகளை, இவர்கள் வளர்த்து வருகின்றனர்.
இவற்றை வைத்தே தங்கள் பொருளதாரத் தேவையைப் பூர்த்தி செய்து வருகின்றனர். தங்களின் தொழிலுக்கு, ஒரு காளை போதும் என்றாலும், இவர்கள் ஒரு மாட்டு மந்தையே சொந்தமாக வைத்துள்ளனர்.
90% காளைகள் (90% bulls)
தங்களின் தொழிலுக்கு, ஒரு காளை போதும் என்றாலும், இவர்கள் ஒரு மாட்டு மந்தையே சொந்தமாக வைத்துள்ளனர். இந்த மந்தையில், பசுக்களைவிட காளைகளே, 90 சதவீதம் உள்ளன. காளை மாடுகளை மட்டுமே அதிகளவில் வைத்திருப்பதால், விற்பனை செய்வீர்களா என கேட்டால், 'நிச்சயமாக விற்பனை செய்ய மாட்டோம்' என்கின்றனர்.
மாடுகள்தான் சொத்து (Cows are property)
மேலும் எங்களின் குல வழக்கப்படி, ஒருவர் எத்தனை மாடுகளை வைத்திருக்கிறார் என்பதை பொறுத்தே அவர்களின் வசதி கணக்கிடப்படும்.ஒரு பெண்ணுக்கு, திருமணம் முடிந்து புகுந்த வீடு செல்லும் போது, தாய்வீட்டு சீதனமாக, குறைந்தது, 20 மாடுகளை உடன் அனுப்பி வைப்போம்' என்கின்றனர்.
10 மாடு இருந்தால் பெண்
அதே போல், மணமகனுக்கு, 10 மாடுகளாவது சொந்தமாக இருந்தால் மட்டுமே, பெண் தரப்படும் எனவும், அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பாலுக்காக பசுக்கள் வளர்க்கப்படுவதும், வீரத்தின் அடையாளம், அந்தஸ்து, ஜல்லிக்கட்டு, சுயவிருப்பம், பொழுதுபோக்கு என, பல்வேறு காரணங்களுக்காக மாடுகள் வளர்க்கப்படும் நிலையில், மகளுக்கு சீதனம், சமூக அந்தஸ்து என்பதற்காக, மாடுகளை வளர்ப்பது, வியக்க வைக்கிறது.
நாட்டு மாடுகள் (Country cows)
இவர்களின் வளர்ப்பில், திமில் உடைய பொலி காளைகளும், 3.5 அடி உயரம் மட்டுமே வளரக்கூடிய குட்டை ரக பசுக்களும் என நாட்டு மாடுகள் மட்டுமே உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாடுகளே உயிர்
மாடுகளின் மேய்ச்சலுக்கான புல்வெளி, புதுார்மேடு சுற்றுப் பகுதியில் அதிகளவில் உள்ளதாலும், போக்குவரத்து வசதி உள்ளதாலும், 50 ஆண்டுகளாக, இங்கு வசித்து வருகிறோம். அதிக வசதி இல்லாவிட்டாலும், மாடுகளை, எங்களின் உயிராக மதித்து வளர்த்து வருகிறோம்.எஸ்.பெருமாள் புதுார் மேடு.
மேலும் படிக்க....
PM Kisan திட்டத்தில் விதிகள் மாற்றம் - விண்ணப்பதாரரின் பெயரில் நிலம் இருக்க வேண்டியது கட்டாயம்!
விவசாயத்திற்கு இலவச நீர் பாசன கருவிகள்- வேளாண் துறை அழைப்பு!
Share your comments