1. கால்நடை

புதிதாக "கால்நடை மருத்துவர்" செயலி: இனி உடனடி தகவல் பெறுங்கள்

Deiva Bindhiya
Deiva Bindhiya
Newly Launched "Kalnadai Maruthuvar" App: Now get instant information

சென்னை நந்தனத்தில் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அலுவலகத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக கால்நடை மருத்துவம் குறித்த விபரங்களை பெற கால்நடை மருத்துவர் செயலியை, மீன்வளம்-மீனவர்கள் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு அமைச்சர்அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

விவசாயி, செல்லப்பிராணி உரிமையாளர்கள் மற்றும் கால்நடை தொழில் முனைவோருக்காக கால்நடை மருத்துவர் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. அந்தச் செயலியில் கால்நடை மருத்துவர் குறித்த விவரங்களை அறிந்து தங்களின் தேவைக்கேற்ப தொடர்பு கொள்ளும் வசதியும் உள்ளது. காணொளி தொடர்பு மூலமாக முதலுதவி மருத்துவர் அறிவுரை பெற முடியும்.

மேலும் படிக்க: இலம்பி நோய் (Lumpy Skin Disease) தமிழகத்தில் பரவ தொடங்கியது: எச்சரிக்கை

செயலியின் அம்சங்கள்

செயலியின் முகப்பு பக்கத்தில் கால்நடை வளர்ப்போர், செல்லபிராணி வளர்ப்போர், கால்நடை தொழில் முனைவோர், களஞ்சியம், கால்நடை மருத்துவர் மற்றும் உழவன் செயலிக்கான முகப்பு என 6 பிரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

கால்நடை வளர்ப்போர்

  • கால்நடை வளர்ப்போர் பிரிவில், பசு, எருமை, ஆடு, கோழி மற்றும் குதிரை என தனித்தனியாக கால்நடைகளின் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது.
  • இவ் கால்நடைகளை கிளிக் செய்து உள்நுழையும்போது, உங்கள் அருகில் உள்ள மருத்துவரின் பெயர், தூரம், முகவரி என தகவல்களை பெற்றிடலாம்.

செல்லப்பிராணி வளர்ப்போர்

  • இப்பிரிவில் பூனை, நாய், அயலின பறவைகள் மற்றும் செல்லபிராணிரகள் மற்றும் ஆய்வக விலங்கு அலோசகர் போன்ற பிரிவுகளில் தகவல்களை பெறலாம்.

கால்நடை தொழில்முனைவோர்

  • இந்த பிரிவில் மூன்று பிரிவுகள் உள்ளன. முதலாவதாக, பண்ணை ஆலோசகர், இரண்டவதாக பொருளாதார அறிவுரைகள் மற்றும் மூன்றவதாக விரிவாக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

களஞ்சியம்

  • இது மிகவும் முக்கியமான பிரிவு என்றே சொல்லலாம், ஏனென்றால், இதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் முற்றிலும் மாறுப்பட்டுள்ளது. இதில் கால்நடை பராமரிப்பு முறைகள், அரசாணைகள், இதழ்கள், செய்திகள், மற்றும் மற்றவை என பல்வேறு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

கால்நடை மருத்துவர்

  • இந்த பிரிவில் பதவு செய்யதவர்கள் மட்டுமானது.

உழவன் செயலி

  • இதுவரை உழவன் செயலி அறிந்திடாதவர்களுக்காக, இந்த முகப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த செயலி மூலம் நிச்சயம், அரசின் சிறப்புத் திட்டங்கள், அரசாணைகள், வழிகாட்டு நெறிமுறைகள் பராமரிப்பு மற்றும் பண்ணை அமைத்தல் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் இதில், 3,360 கால்நடை மருத்துவ பட்டதாரிகள் இந்தச் செயலி மூலம் இணைந்துள்ளனர்.

மேலும் படிக்க:

வாழையில் ஊடுபயிர் செய்ய ரூ.10,000 வரை மானியம் பெறலாம்!

12-ந்தேதி முதல் கால்நடை மருத்துவ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

English Summary: Newly Launched "Kalnadai Maruthuvar" App: Now get instant information Published on: 13 September 2022, 03:20 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.