1. கால்நடை

வாழை மரத்தில் நோய்களை ஏற்படுத்தும் பூச்சிகள் மற்றும் தடுப்பு முறைகள்

KJ Staff
KJ Staff

தண்டுத் துளைக்கும் வண்டு

அறிகுறி: இவ்வண்டு சதைப்பற்றுள்ள வாழைத் தண்டில் சிறிய துளைகளிட்டு அதனுள் முட்டையிடும். துளைகளிலிருந்து பழுப்பு நிறத்தில் பிசுபிசுப்பான திரவம் வெளிவரும். இது முதல் அறிகுறியாகும். பின்பு முட்டைகள் பொரித்து 3 முதல் 25 புழுக்கள் வரை தண்டினைக் குடைந்து உணவாக உட்கொண்டு வேகமாக வளரும். இதனால் தண்டின் திசுக்கள் பாதிக்கப்பட்டு வாழை இலையின் ஓரங்கள் காய்ந்து இலைகள் வெளுத்து விடும். இலைகள் கொத்தாக ஒரே இடத்திலிருந்து வெளிவருவதுபோல் காணப்படும். வாழைப்பட்டைகள் அழுகிவிடும். பூ வெளிவருவது பாதிக்கப்பட்டு. காய்களின் முதிர்ச்சியும் பாதிக்கப்படும். புழுக்களின் சேதம் அதிகமாக இருந்தால், மிக இலேசான காற்றில் கூட தாக்கப்பட்ட வாழை மரங்கள் ஒடிந்து விழுந்து விடும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

  • வாழைத் தோட்டத்தில் அவ்வப்போது காய்ந்த இலைகளையும் சருகுகளையும் அப்புறப்படுத்தி தூய்மையாக வைக்கவேண்டும்.
  • பக்கக் கன்றுகளை அதிகம் வளரவிடாமல் வெட்டி அகற்றிவிடவேண்டும்.
  • வண்டு தாக்கிய மரங்களை சிறு துண்டுகளாக வெட்டி உலர வைத்து பின்பு தீயிட்டு அழிக்கவேண்டும்.
  • மோனோகுரோட்டோபாஸ் 1.50 மில்லியுடன் 350 மில்லி தண்ணீரை எடுத்துக் கொள்ளவேண்டும். இம்மருந்து கரைசலைத் தண்டின் அடிப்பாகத்திலிருந்து 60 செ. மீ உயரத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ள சாய்வாகக் கீழே நோக்கி தண்டினுள் ஆழமாகச் செலுத்த வேண்டும்.
  • இதே போன்று வாழைத் தண்டில் 150 செ. மீ உயரத்தில், கீழே செலுத்திய பக்கத்திற்கு எதிர்புறத்தில் மேலும் 2 மில்லி செலுத்தவேண்டும். மொத்தமாக ஒரு மரத்திற்கு நான்கு மில்லி அளவு மருந்து செலுத்தவேண்டும்.
  • மரத்தின் 5வது மாதம் முதல் 8வது மாதம் வரை ஒவ்வொரு மாதமும் இந்த ஊசி மூலம் பூச்சிக்கொல்லி மருந்து போடுவதன் முலம் வண்டின் தாக்குதலைத் தவிர்க்க முடியும்.

கிழங்கு வண்டு: இதனைக் கட்டுப்படுத்த 10 முதல் 20 கிராம் கார்பரில் தண்டுப் பகுதியைச் சுற்றி தூவி மண்ணைக் கிளறிவிடவேண்டும்.

வாழை அசுவினி

இதுவாழை முடிக்கொத்து நோயைப் பரப்பும் வைரஸ் கிருமியைப் பரப்புகிறது. இதனைக் கட்டுப்படுத்த கீழே காணும் மருந்துகளில் ஏதேனும் ஒன்றைத் தெளிக்கவேண்டும். பாஸ்போமிடான் ஒரு மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது மெத்தில் டெமட்டான் 2 மில்லி தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து தண்டின் மேலிருந்து அடி வரை தெளிக்கவேண்டும். இதை 21 நாள் இடைவெளியில் சுமார் 1 மில்லி மோனோகுரோட்டோபாசை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ள ஊசி மூலம் செலுத்தவேண்டும். குறை வந்த பிறகு மருந்து செலுத்தக்கூடாது.

சாறுண்ணிகள் மற்றும் கண்ணாடி இறக்கை பூச்சி

இவைகள் இலைகளிலிருந்து சாற்றை உறிஞ்சுவதால், இலைகளின் மேல் பாகத்தில் சிறிய வெள்ளை நிறப்புள்ளிகள் தென்படும். இதனால் வாழையின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

கட்டுப்படுத்துதல்

எக்டருக்கு மீத்தைல் டெமடான் 20 இசி 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது மோனோகுரோட்டோபாஸ் 1 மில்லி ஒரு லிட்டர் தண்ணீருடன் என்ற விகிதத்தில் ஏதாவது ஒன்றினைத் தெளித்துக் கட்டுப்படுத்தவேண்டும்.

நூற்புழுக்கள்

அறிகுறிகள்:

  • வேர்களிலும், கிழங்குகளிலும் சாற்றை உறிஞ்சி வாழ்கின்றன. இதனால் வேர்களிலும், கிழங்குகளிலும் கருமை நிறங்கள் காணப்படும். நூற்புழுக்கள் ஏற்படுத்தும் காயங்கள் வழியாக பாக்டீரியா மற்றும் பூசண நோய்க்கிருமிகள் எளிதில் நுழைந்து நோய்களை உண்டாக்க ஏதுவாகும். தாக்கப்பட்ட வாழைகள் வாடும்.

கட்டுப்பாடு:

  • நடவுக்கு வாழைக்கன்றுகளை நூற்புழுக்கள் தாக்காத இடங்களிலிருந்து தேர்வு செய்ய வேண்டும்.
  • தாக்கிய இடங்களில் மீண்டும் வாழையைப் பயிரிடாமல் மாற்றுப்பயிர் செய்ய வேண்டும்.
  • கிழங்கில் மருந்திடல் (Paring and Prolinage): வாழைக் கன்றுகளை நடுவதற்குமுன் கிழங்குப்பகுதியில் உள்ள வேர்கள் மற்றும் கருநிறப் பகுதிகளை கத்தியால் நன்கு சீவிவிட்டு, குழைந்த களிமண்ணில் கிழங்கை முக்கி எடுத்து அதன்மீது 40 கிராம் கார்போஃபியூரான் குறுணை மருந்தைப் பரவலாகத் தூவி, பின்னர் நட வேண்டும்.
English Summary: Pest and Disease management in Banana Published on: 05 December 2018, 04:20 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2022 Krishi Jagran Media Group. All Rights Reserved.