1. கால்நடை

பன்றி வளர்ப்பு

KJ Staff
KJ Staff

நம் நாட்டில் வளர்ந்து வரும் மக்கள் தொகையின் உணவு மற்றும் ஊட்சத்திற்கான பாதுகாப்பை ஒருங்கிணைந்த கால்நடை வளா்ப்பு மூலம் பூர்த்தி செய்யலாம். பலதரப்பட்ட கால்நடை இனங்களில், பன்றி வளர்ப்பு, இறைச்சி உற்பத்திக்கான ஒரு முக்கியமான ஆதாரமாக கோழி வளர்ப்பிற்கு அடுத்து இடம் பிடிக்கிறது. இறைச்சி உற்பத்தி மட்டுமல்லாமல், எருவும் தருகிறது. பன்றி வளா்ப்பினால் ஊரக உழவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தருகிறது. மற்றம் உபரி வருமானம் தருவதால் உழவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடிகிறது.

பன்றி வளர்ப்பின் பயன்கள்

 1. தீவனங்களை மாற்றும் திறன் பன்றிகளுக்கு அதிகளவு இருக்கிறது.
 2. பன்றிகள் பலதரப்பட்ட உணவுகளை புற்கள், தீவனப்பயிர்கள், சேதமடைந்த தீவனங்களை, உண்டு அதிக மதிப்புள்ள இறைச்சியை தருகின்றன.
 3. பன்றிகள் சிறிய இடைவெளியிலேயே தன் இனத்தைப் பெருக்கும். ஒரு பெண் பன்றி 8-9 மாதங்களிலேயே குட்டி ஈனும். ஒரு வருடத்திற்கு 2 முறை குட்டி ஈனும். ஒவ்வொரு இனப்பெருக்கத்தின் போது 8-12 பன்றிக்குட்டிகளை ஈனும்.
 4. பன்றி வளர்பபிற்கு சிறிய முதலீட்டாலான கட்டடங்கள் மற்றும் உபரணங்கள் போதுமானது.
 5. பன்றிகள் இறைச்சியை 65%க்கு குறையாமல் அளிக்கும்.
 6. பன்றிக் கறியானது அதகி கொழுப்புடன், குறைவான நீர்ச் சத்துடன், அதிக சக்தி அளிக்கக் கூடிய ஒரு ஊட்டச்சத்து உணவாகும். இதில் தையாமின், நியாசின் ரிபோஃபிளேவின் என்ற விட்டமின்கள் அதிகளவில் உள்ளன.
 7. பன்றி எரு வேளாண் பண்ணைகள் மற்றும் மீன் குட்டைகளில் உரமாக பயன்படுத்தப்படுகிறது.
 8. பன்றிகளில் அதிகளவு கொழுப்பு இருப்பதால், கோழித் தீவனம், சோப், பெயின்டுகள் மற்றும் இதர வேதியியல் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
 9. பன்றி வளர்ப்பினால் விரைவில் வருமானம் 6-8 மாதங்களிலிருந்து கிடைக்கிறது.
 10. பன்றி இறைச்சியினால் உள்ளூர் மற்றும் வெளிநாடு ஏற்றுமதி சந்தைகளில் அதிகளவு சந்தை வாய்ப்பு உள்ளது.

பன்றி வளர்ப்பிற்குத் தேவையான மேலாண்மை முறைகள்

பன்றிக்குடில் மேலாண்மை

 1. சற்று உயரமான இடத்தில் குடில் அமைக்க வேண்டும்.
 2. நீர்தேங்காத, சொதசொதப்பான மற்றும் அதிக மழைபெறும் இடங்களைத் தவிர்க்க வேண்டும்.
 3. குடிலின் பக்கச் சுவர்கள் 4-5 அடியிலும், மீதமுள்ள உயரத்திற்கு இரும்பு குழாய்கள் (அ) மரக்குச்சிகள் கொண்டு அமைக்க வேண்டும்.
 4. சுவர்களில் ஈரம் உள்ளே கசியாதவாறு பூச்சிடவேண்டும்.
 5. குடிலின் உள்ளே அறைகள் 8-10 அடி உயரத்துடன் இருக்க வேண்டும்.
 6. நல்ல காற்றோட்டமாக இருக்க வேண்டும்.
 7. தரைப்பகுதி திடமாக, வழுக்காதவாறு, சரிவாகவும், நீர் வடியுமாறு இருக்க வேண்டும்.
 8. உண்ணும் கலனுக்கான இடம் 6-12 இந்த அளவுடன் இருக்க வேண்டும்.
 9. எளிதாக சுத்தம் செய்வதற்காக உண்ணும் கலனின் மூலைகள், வடிகால் பகுதி, சுவர்களின் மூலைகள் மொழுமொழுப்பாக இருக்க வேண்டும்.
 10. ஒவ்வொரு பன்றிக்கும் போதுமான அளவு இடம் ஒதுக்க வேண்டும்.
 11. கோடைக் காலங்களில் நிழலும், குளிர்ந்த நீரும் குடிப்பதற்கு அளிக்க வேண்டும்.
 12. சாணி மறறும் சிறுநீரை சுத்தமாக அகற்றி, சுத்தம் செய்ய வேண்டும்.
 13. ஆண் பன்றி / பால் தரும் பெண் பன்றிக்கு என தனித்தனியே இடம் ஒதுக்கி தரவேண்டும்.

இனவிருத்திக்கான பன்றியைத் தேர்வு செய்தல்

 1. வங்கியிலிருந்து கடன் தொகை பெற்றவுடன், அருகில் உள்ள கால்நடை பண்ணையிலிருந்து நல்ல தரமான பன்றி இனத்தை வாங்க வேண்டும்.
 2. வர்த்தக முறையில் பன்றி வளர்ப்பு செய்வதாக இருந்தால், நல்ல ஆரோக்கியத்துடன் உள்ள கலப்பு இனம் (அ) வெளிநாட்டு இனத்தை வாங்க வேண்டும்.
 3. இனவிருத்தி செய்யும் நிலையில் உள்ள பன்றிகளை வாங்க வேண்டும்.
 4. புதிதாக வாங்கிய பன்றிகளுக்கு அடையாளக் குறியிட வேண்டும்.
 5. நோய்களுக்கு எதிராக தடுப்பூசி போட வேண்டும்.
 6. புதிதாக வாங்கிய பன்றிகளை முதல் 2 வாரங்களுக்கு நேரடி கண்காணிப்பில் வைத்திருந்து, பின் மற்ற பன்றிகளுடன் கலந்து விட வேண்டும்.
 7. பரிந்துரைக்கப்பட்ட படி ஒரு குடிலுக்கு தேவையான அளவு பன்றிகளை வாங்க வேண்டும்.
 8. மூன்று மாத இடைவெளி விட்டு 2 பிரிவுகளாக பன்றிகளை வாங்கவும்.
 9. தேவையில்லாத, முதிர்ந்த பன்றிகளை தரப்பகுப்பு செய்ய வேண்டும்.
 10. 10-12 முறை இனப்பெருக்கம் செய்து குட்டி ஈன்ற முதிர்ந்த பன்றிகளை நீக்க வேண்டும்.

தீவன மேலாண்மை

 1. பன்றிகளுக்கு சிறப்பான தீவன உணவை தர வேண்டும்.
 2. அடர் தீவனங்களை தேவையான போது தரலாம்.
 3. விட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்களை போதுமான அளவு தரவும்.
 4. போதுமான அளவு சுத்தமான நீரை பருகத் தரவும்.
 5. பன்றிகளுக்கு போதுமான அளவு பயிற்சிகளைத் தரவும்.
 6. கர்ப்பக் காலத்தில் பெண் பன்றிகளுக்கு அதிக ஊட்டச்சத்துள்ள தீவனங்களைத் தரவேண்டும்.
 7. பெண் பன்றியின் வயது, எடை, அளவைப் பொறுத்து பெண் பன்றிகளுக்கு அளிக்கும் உணவின் அளவு மாறுபடும்.
 8. வீட்டு சமையல் அறை/ஹோட்டல் /குளிர்பதன சேமிப்பு/சேமிப்புக் கிடங்கிலிருந்து வரும் கழிவை தீவனமாகப் பயன்படுத்தலாம்.

நோய்களுக்கு எதிராக பாதுகாப்பு

 1. குறைந்த அளவு உணவு எடுத்துச் கொள்ளுதல், காய்ச்சல், மாறுபட்ட நடவடிக்கை போன்ற உடல்நிலை சரியில்லாத அறிகுறிகளைக் கவனித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
 2. உடல்நிலை சரியில்லை என்று தெரிந்தால் அருகில் உள்ள கால்நடை மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.
 3. பொதுவான நோய்களுக்கு எதிராகப் பாதுகாப்பு தரவேண்டும்.
 4. பெரிய அளவில் நோய் பாதிக்கப்பட்டால், ஆரோக்கியமாக உள்ள பன்றிகளிடமிருந்து நோய் தாக்கிய பன்றிகளை தனித்து வைக்க வேண்டும்.
 5. பன்றிகளுக்கு சீராக வயிறு சுத்தம் செய்யும் மருந்துகளைத் தரவேண்டும்.
 6. சுகாதாரத்தை பேண, பன்றிகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
 7. பரிந்துரைக்கப்பட்ட படி தடுப்பூசி மருந்துகளைப் போட வேண்டும்.

இனப்பெருக்கக் கால கவனிப்பு

 1. பன்றிகள் சாதாரணமாகவே அதிகளவில் தன் இனத்தை உற்பத்தி செய்யும். வருடத்திற்ககு 2 முறை இனப்பெருக்கம் செய்யும்.
 2. 10 பெண் பன்றிகளுக்கு 1 ஆண்  பன்றி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
 3. இனப்பெருக்கத்தின் உச்சநிலையில் இருக்கும் போது இனப்பெருக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்

கர்ப்பக்கால கவனிப்பு

ஓரிற்றுப் பன்றிக்குட்டிகளை ஈனும் ஒரு வாரத்திற்கு முன் உள்ள கர்ப்பமுள்ள பெண் பன்றிகளுக்கு போதுமான இடம், உணவு, தண்ணீர் போன்றவை கிடைக்குமாறு அதிக கவனிப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும். பெண் பன்றிகள் மற்றும் ஓரிற்றுப் பன்றிக்குட்டிகள் உள்ள கூடாரத்தை பன்றிக்குட்டிகளை ஈனும் தேதிக்கு முன்பே 3-4 நாட்களுக்கு நுண்ணுயிர் நீக்கம் செய்ய வேண்டும். பெண் பன்றிக் குட்டிகளை குட்டி ஈனும் கூடாரத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும்.

பன்றிக்குட்டிகளைக் கவனித்தல்

 1. புதிதாகப் பிறந்த பன்றிக் குட்டிகளை அதிகக் கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 2. நஞ்சுக்கொடியை அறுத்த இடத்தில் அயோடின் கொண்டு நுண்ணுயிர் நீக்கம் செய்ய வேண்டும்.
 3. முதல் 6-8 வாரங்களுக்குத் தாய்பால் தரவேண்டும்.
 4. மோசமான காலநிலைகளில், குறிப்பாக 2 மாதங்கள் இருக்கும் போது பன்றிக்குட்டிகளைப் பாதுகாக்க வேண்டும்.
 5. பிறந்த பிறகு ஊசிப் போன்ற பற்களை எடுத்து விட வேண்டும்.
 6. பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி மருந்துகளைப் போட வேண்டும்.
 7. குட்டிகளுக்கு இரத்த சோகை ஏற்படாமல் இருக்க இரும்புச்சத்து அடங்கிய உணவை தர வேண்டும்.
 8. ஆண் பன்றிக் குட்டிகளை இனப்பெருக்கம் செய்யாமல், இறைச்சிக்கு பயன்படுத்துவதாக இருந்தால், 3-4 வாரங்களில் விறைநீக்கம் செய்ய வேண்டும்.
 9. பால் தரும் பெண் பன்றிக்கு கூடுதலாக உணவு தர வேண்டும்.

சந்தைப்படுத்துதல்

பன்றி வளர்ப்பதில், இனவிருத்தி செய்யப் பயன்படுத்தும் பன்றிக்குட்டிகள், கொழுப்பு நிறைந்த பன்றிகள், முதிர்ந்த பன்றிகள் ஆகியவற்றை விற்பனை செய்யலாம். 2-3 மாதங்களுடைய பன்றிக் குட்டிகளை விற்பதால் அதிக லாபம் விரைவில் கிடைக்கிறது.

English Summary: Pig farming

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.