கோடை வெயில் காரணமாக, கறிக்கோழி விலை திடீரென கிலோவுக்கு 80 ரூபாய் வரை அதிகரித்திருப்பது, சிக்கன் ப்ரியர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. தமிழகத்தில் நாமக்கல், வேலுார், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உற்பத்தியாகும் கறிக்கோழி, மாநிலத்தின் பிற மாவட்டங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
அந்தவகையில் வேலுார் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள கோழி பண்ணைகளில் உற்பத்தியாகும் கறிகோழி, காஞ்சிபுரத்தில் உள்ள சிக்கன் கடைகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
கிலோ ரூ.180
காஞ்சிபுரத்தில் உள்ள சிக்கன் கடைகளில் கடந்த டிச., ஜனவரியில் கிலோ சிக்கன், 180 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது, பண்ணைகளில் கறிகோழி உற்பத்தி செலவு அதிகரிப்பு மற்றும் கோடை வெயில் காரணமாக உற்பத்தி குறைந்துள்ளதால், கிலோவுக்கு, 80 ரூபாய் வரை உயர்ந்து உள்ளது.
இதுகுறித்து, சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சிக்கன் இறைச்சி கடை உரிமையாளர் ஆதம்பாஷா கூறியதாவது:
கோடை வெயில் அதிகரித்து வருவதால், பண்ணையிலேயே கோழி குஞ்சுகள் இறந்துவிடுகின்றன. மேலும், கோழித்தீவனம் விலை உயர்வு, போக்குவரத்து வாகனங்களின் வாடகை உயர்வு காரணமாக பிப்ரவரியில் இருந்தே சிக்கன் விலை படிப்படியாக உயர்ந்து வந்தது.
கடந்த ஜனவரியில் கிலோ 180 ரூபாய்க்கு விற்ற நிலையில், தற்போது 260 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். அப்படியானால், இனி வரும் நாட்களில் கறிக்கோழி விலைக் கடுமையாக உயரக் கூடிய ஆபத்து உள்ளது.
மேலும் படிக்க...
இரட்டை கரு முட்டைகள் - ஆர்வம் காட்டும் அசைவப் பிரியர்கள்!
கொரோனாவால் அதிகரித்த ஆண்மைக் குறைபாடு பிரச்னை - ஆய்வில் தகவல்!
Share your comments