1. கால்நடை

கால்நடைகளைக் கலங்கடிக்கும் கோமாரி நோய்- தடுக்கும் இயற்கை மருந்து!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Credit : ThePrint

மாடுகளைத் தாக்கும் கோமாரி நோய்க்கு வாய்வழி மருந்து மிகச்சிறந்த பலனைத் தரும் என கால்நடை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கோமாரி நோயானது வைரஸ் மூலமாகக் கால்நடைகளுக்கு பரவும் கொடுமையான நோய் ஆகும்.

கோமாரி நோய் – Foot and Mouth Disease (Aphthae epizooticae)

கோமாரி நோய் உண்டாக்கும் வைரஸ் கிருமியானது தண்ணீர் மூலமாகவும், காற்றின் மூலமாகவும் மிக விரைவில் பரவக்கூடியது. பொதுவாக கால்நடைகள், எருமைகள், ஆடுகள், பன்றிகள் பாதிக்கப்படுகின்றன.

அறிகுறிகள் (Symptoms)

மடி,உள்வாய் பகுதி மற்றும் கால் குளம்புகளின் நடுவில் கொப்புளங்கள் ஏற்படும். இது பின்னர் புண்ணாக மாற்றமடையும்.

பாதிப்புகள் (Vulnerabilities)

  • தீவனம் உட்கொள்ள முடியாமல் மிகவும் பாதிக்கப்படும். மிகவும் மெலிந்து விடும்.

  • கால்நடை மந்தநிலையில் காணப்படும்.

  • பால் உற்பத்தியின் அளவு குறையும்.

  • சினையாக உள்ளக் கால்நடைகளில் கருச்சிதைவு ஏற்படக்கூடும்.

  • கறவை மாடுகளில் பால் குடித்து வரும் இளம் கன்றுகளும் நோய்த் தாக்கி இறக்கவும் நேரிடும்.

தடுக்கும் வழிகள் (Ways to prevent)

  • குறித்த நேரத்தில் தடுப்பூசி போடுவதன் மூலம் கால்நடைகளை நோயிலிருந்து காக்கலாம்.

  • கொப்புளம் உள்ள பகுதியில் வேப்ப எண்ணெயை தடவலாம்.

  • மாட்டுத் தொழுவத்தைச் சலவை சோடா கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

  • தொழுவத்தில் சுண்ணாம்பைத் தெளிக்கலாம்.

  • நோய் பாதித்த கால்நடைகளுக்குப் பசுந்தீவனம் மட்டும் கொடுப்பது நல்லது.

  • நோய் பாதித்தக் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்த்தல் வேண்டும்.

வாய் வழி மருந்து (Oral medicine)

மிளகு 10 கி, வெந்தயம் 10 கி, சீரகம் 10 கி எடுத்து ஒரு நாள் ஊறவைத்து, அரைத்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் 100 கிராம் நாட்டுச் சர்க்கரை, 10 கிராம் மஞ்சள் தூள் மற்றும் 5 பல் பூண்டு சேர்த்து அரைத்து அதனுடன் இடித்த தேங்காயை கலந்து 2 பாகமாகக் கொடுக்க வேண்டும். இதேபோல் 3 வேளை வீதம் 5 நாட்களுக்கு கொடுக்க வேண்டும்.

கால்நடைகளில் உள்ள புண்களைக் குணப்படுத்த, ஒரே அளவு வேப்பிலை, மருதாணி, குப்பைமேனி மற்றும் துளசி இலை இவற்றுடன் மஞ்சள் தூள் மற்றும் பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும். இதனை நல்லெண்ணெயுடன் கலந்து சுடவைத்துக் கொள்ளவேண்டும்.

நன்கு ஆறிய பின்னர் அதைப் புண்கள் மேல் இடுவதன் மூலம் குணப்படுத்தலாம்.
வருமுன் காத்தல் என்பதற்கிணங்க இந்நோய் தாக்காவண்ணம் இருப்பதற்கு மாடுகளுக்கு வருடத்திற்கு இருமுறை தடுப்பூசி போட்டுக்கொள்வது ஒன்றே சிறந்த நிவாரணம்.

மேலும் படிக்க...

பால் பண்ணை அமைக்க ரூ.1.75 லட்சம் மானியம்- மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!!

அதிகரிக்கும் வெயில்- மாடுகளின் பால் ஊற்பத்தி குறைகிறது!

கன்று ஈன்ற மாடுகளைப் பராமரிக்கும் வழிமுறைகள்!

English Summary: Severe Eczema - Natural Remedy to Prevent! Published on: 18 April 2021, 07:39 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.