கோவை மாவட்டம் வேடப்பட்டி பகுதியில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு வகையான நாய்களை பராமரித்து வருவதோடு Yazhli Pet Kennel என்பதன் மூலம் நாய்கள் விற்பனையிலும் ஈடுபட்டு வரும் ராம் அவர்களுடன் கிரிஷி ஜாக்ரன் சமீபத்தில் நேர்க்காணல் மேற்கொண்டது.
தன்னிடமுள்ள நாய்களில் ஒரு சில இனங்களை நேரடியாக நமக்கு அறிமுகம் செய்து வைத்து, அந்த குறிப்பிட்ட நாய் இனங்களின் சிறப்பம்சம் என்ன? அவற்றினை பராமரிக்கும் விதம்? என்று பல தகவல்களை கிரிஷி ஜாக்ரனுடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார் ராம். அதன் விவரங்கள் பின்வருமாறு-
ஜெர்மன் ஷெப்பர்ட்:
ஹிட்லர் என செல்லப் பெயரிடப்பட்ட நாயினை நமக்கு அறிமுகப்படுத்தினார் ராம். ” உலகத்தையே கலங்க வைத்த ஹிட்லர் பெயரை தான் இந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்க்கு நாங்க வச்சிருக்கோம். இது ஒரு Long coat வகை, இதை மாதிரி Medium coat-யும் நம்மக்கிட்ட இருக்கு. அறிவிலேயே சிறந்த நாய் அப்படினு கேட்டா யோசிக்காம நீங்க ஜெர்மன் ஷெப்பர்ட்டை சொல்லலாம். அந்தளவுக்கு இது பயங்கர ஷார்ப். கிட்டத்தட்ட இதை ஒரு ALPHA MALE தான், எவ்வளவு நாய் கூட இருந்தாலும் அப்படி தனிச்சு நான் தான் அப்படிங்கிற அளவுக்கு குணாதிசயம் கொண்டது. இந்த குறிப்பிட்ட இனத்தை தாக்குறது பெரிய நோய்னு பார்த்தால் முடி கொட்டுறது நடக்கும். வழக்கமா எல்லா நாய்களையும் பராமரிப்பது போல் இதற்கு என்று தடுப்பூசி எல்லாம் இருக்கு, அதை முறையா செலுத்தினாலே போதும்.”
“ஜெர்மன் ஷெப்பர்ட் Long coat வகை நாய்களின் அழகை மெருகேற்றுவது அதோட முடி தான். முடியை வெட்டமா, சீவி பராமரித்தாலே நல்ல லுக் நமக்கு கிடைக்கும். நாய்கள் கண்காட்சி, போட்டி எல்லாவற்றிலும் இதை கொண்டு போகலாம். நம்ம டிரெயினிங்க் கொடுக்கிறதை கற்பூரம் மாதிரி உடனே பிடிச்சிக்கும்." என்றார் ராம்.
குறைஞ்சதே ஒரு லட்சம் தானா?
Belgian Malinois இனத்தை சார்ந்த நாயினை அறிமுகம் படுத்தி வைக்கும் போதே, இதோட விலை குறைஞ்சது 1 லட்சம் தான் ப்ரோ என்றார், ராம். அதுக்குறித்து மேலும் தெரிவிக்கையில், “ என்னடா இவ்வளவு விலையானு கேட்டா? அதுக்கு முழு வொர்த்தான இனம் தான் Belgian Malinois. ஒரு சில குறிப்பிட்ட நாய் இனங்களை தான் Champion Dogs-னு வகைப்படுத்துவாங்க, அதுல இதுவும் உண்டு. பார்க்க தனுஷ் மாதிரி ரொம்ப ஒல்லியா இருக்கும். ஆனால், அதோட உருவத்துக்கும், செயலுக்கும் அவ்வளவு வித்தியாசம். IQ லெவல் ரொம்ப அதிகம், யாராவது பாதுகாப்புக்காக வளர்க்கனும்னு நினைச்சா Belgian Malinois பெஸ்ட்.”
”இந்த இனம் மட்டுமில்ல, அது என்ன நாய் இனமாக இருந்தாலும் சரி, நம்மளோட பராமரிப்பில் தான் அதோட ஆயுள்காலம் இருக்கும். நீங்க கொடுக்கிற உணவு வகை, நாய்களை சுற்றியிருக்கிற சூழல் இதெல்லாம் தான் ஒரு நாய் நீண்ட காலம் வாழ்றதுக்கு அடிப்படைனு இங்க நிறைய பேருக்கு தெரிய மாட்டேங்குது” என்றார்.
நாய் வாங்க விரும்புவோர், நாய் பராமரிப்பில் சந்தேகம் உள்ளோர் கீழ்க்காணும் தொடர்பு எண் மூலம் ராம் அவர்களை அணுகலாம். (தொடர்பு எண்: 97901 32779 )
Read more:
கிணறு தோண்ட அரசிடமிருந்து கடனுதவியா? கரும்பு விவசாயி விளக்கம்
Rottweiler Attitude- ராட்வீலர் நாய் இதெல்லாம் பார்த்தாலே எரிச்சல் ஆகுமா?
Share your comments