1. கால்நடை

கோடைக்கால கால்நடைப் பராமரிப்பு மற்றும் தடுப்பூசி முறைகள்

KJ Staff
KJ Staff
  • கொட்டில்கள் சரியான காற்றோட்ட வசதியோடு அமைக்க வேண்டும்.
  • சூரிய ஒலி நேரிடையாக படாத வண்ணம் வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும் வகையிலும் கொட்டில்களில் மேற்கூரைகளை அமைக்க வேண்டும்.
  • கொட்டிகளின் கூரைகளை வெண்மை நிற வண்ணப்பூச்சி செய்தல் மூலம் வெளிப்புற வெப்பம், உள்ளே வராமல் தடுக்கலாம்.
  • அதிகமான வெப்பம் நிலவும் நேரங்களில் கொட்டில்களின் உள்ளே மின்விசிறி, தண்ணீர்த் தெளிப்பான் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.
  • கால்நடைகளுக்கு எல்லா நேரங்களிலும் சுத்தமான மற்றும் குளிர்ந்தநீர் ஆகியவை கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • பசுந்தீவனங்கள் தட்டுப்பாடு ஏற்படுமானால் அடர் தீவனங்களின் அளவை உயர்த்திக் கால்நடைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • கனிம மற்றும் ஊட்டச்சத்து ஆகிய துணை உணவுகளை அடர் தீவனங்களுடன் சேர்த்து அளித்தல் வேண்டும்.
  • கொட்டில்களின் தரைகள் தரமாகவும் தண்ணீர் வடியக் கூடிய நிலையிலும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிலவும் பருவங்களில் கால்நடைகளை நோய் அறிகுறிகளுக்காக அடிக்கடி பரிசோதிக்க வேண்டும்.
  • நோய் அறிகுறி தென்படும் கால்நடைகளை உடனடியாக பிரித்துக் கால்நடை மருத்துவரின் ஆலோசனையின்படி அவற்றைப்  பராமரிக்கலாம்.
  • நோய் அறிகுறி தென்பட்ட கொட்டிலை உடனடியாக கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
  • தினந்தோறும் கொட்டில்களைச் சுத்தப்படுத்தியபின் கிருமி நாசினி கரைசலைத் தெளித்தல் மூலம் நோய்த் தொற்றுகள் பரவாமல் தவிர்க்கலாம்.
  • கொட்டில்களில் முறையான சுகாதாரம் மற்றும் கால்நடை மருத்துவர் அறிவுரைப்படி உயிர்ப் பாதுகாப்பு முறைகளைச் சரியாகக் கடைப்பிடித்தல் வேண்டும்.
  • கால்நடை மருத்துவரின் ஆலோசனையுடன் உரிய நேரத்தில் ஒட்டுண்ணிகளுக்கான பரிசோதனை மற்றும் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.

காலத்திற்கேற்ற தடுப்பூசி அட்டவணை

 அரசால் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி அட்டவணையின் படி, கால்நடைகளுக்குத் தடுப்பூசி அளிக்க வேண்டும்.

  • ஜனவரி – பிப்ரவரி கோமாரி நோய்
  • மார்ச் - ஏப்ரல்  ப்ருசெல்லோசிஸ் (அ) கருச்சிதைவுநோய்
  • ஜூன் - ஜூலை கோமாரிநோய்
  • ஆகஸ்ட் - செப்டம்பர் (மழைக்காலத்திற்கு முன்பாக) சப்பைநோய்
  • செப்டம்பர் -அக்டோபர் தொண்டை அடைப்பான்
  • பண்ணையில் இறக்கும் மாடுகளைக் கால்நடை மருத்துவரின் பரிசோதனைக்குப் பிறகே, முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.
  • வெளியாடுகளுக்குப் பண்ணையின் உள்ளே அனுமதி மறுத்தலின் மூலம் புதிய நோய்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

 

English Summary: Summer livestock management and vaccination systems Published on: 13 November 2018, 04:07 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.