சங்ராந்திரி விழாவின் நேர்த்திக்கடன் நிகழ்ச்சியில் ஆடு என்று நினைத்து ஆட்டை பிடித்துக்கொண்டிருந்த நபரின் தலையைத் துண்டித்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பலி கொடுக்கும் நேர்த்திக்கடன்
கோயில்களில் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்துவது வழக்கம். ஆயினும் சில பக்தர்கள், ஆடு, கோழி உள்ளிட்ட உயிரினங்களைப் பலி கொடுப்பதாக வேண்டிக்கொண்டு, தாங்கள் நினைத்தக் காரியம் நிறைவேறியப் பிறகு, நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது வழக்கம்.
அந்த வகையில் நடைபெற்ற நேர்த்திக்கடன் நிறைவேற்றும் நிகழ்ச்சியில்தான் இப்படியொரு விபரீதம் நிகழ்ந்தது.
சங்கராந்தி விழா
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் சித்தூர் மாவட்டம், மதனப்பள்ளி அருகே வலசப்பள்ளி என்ற கிராமம் உள்ளது. இங்கு வழக்கம்போல் சங்கராந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவின் ஒரு பகுதியாக ஊர் எல்லையில் உள்ள எல்லாம்மா கோவிலுக்கு நேர்த்திக்கடன் இருந்து ஆடு, கோழி ஆகியவற்றை பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
போதையில் விபரீதம்
கிராம மக்கள் அனைவரும் எல்லம்மா கோவிலுக்கு இரவில் ஆடு, கோழிகளை பலிகொடுக்க வந்திருந்தனர். அப்போது வெட்டுவதற்கான ஆடு ஒன்றை 35 வயது இளைஞர் சுரேஷ் பிடித்துக் கொண்டிருந்தார்.ஆடுகளை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த சலபதி என்பவர் நன்றாக மது அருந்தி முழு போதையில் இருந்தார்.
மனிதத் தலைத் துண்டிப்பு
நள்ளிரவு 12 மணி அளவில் நடைபெற்ற இந்த பலிகொடுக்கும் சம்பவத்தின்போது போதையில் இருந்த சலபதி, ஆடு என்று நினைத்து ஆட்டை பிடித்துக்கொண்டிருந்த சுரேஷ் தலையை ஆடு வெட்டும் கத்தியால் ஓங்கி வெட்டினார்.
இதனால் படுகாயம் அடைந்த சுரேஷ் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அங்கு
இருந்தவர்கள் உடனடியாக சுரேசை மீட்டு மதனப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
பல கோணத்தில் விசாரணை
பலியான சுரேசுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த சம்பவம் தவறுதலாக நடந்ததா? அல்லது முன்விரோதம் காரணமாக நடத்தப்பட்டதா? வேறு ஏதேனும் பின்னணி இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கோயில் நிகழ்ச்சியில் மனிதரைப் பலிகொடுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க...
படுத்த படுக்கையாக இருந்தவர் எழுந்து நடந்த அதிசயம்- கொரோனாத் தடுப்பூசி செய்த மாயம்!
Share your comments