கறவை மாடுகள், வெள்ளாடு வளர்க்க விரும்புவோர் மதுரையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் பயிற்சி முகாம்களில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுயதொழில்கள்:
வெள்ளாடு வளர்ப்பும், கறவை மாடுகள் வளர்ப்பும் நம் நாட்டின் மிக முக்கியமான லாபம் தரும் சுயதொழில்கள் (Self-employment). விவசாய வேலை செய்து வரும் பலரும் இதைத்தான் செய்து வருகிறார்கள். சரியான பயிற்சியும், முறையான திட்டமிடலும் உள்ளவர்கள் வெள்ளாடு வளர்ப்பு (Goat breeding) மற்றும் கறவை மாடுகள் (Dairy Cows) வளர்ப்பில் நல்ல லாபம் சம்பாதிக்கலாம். படித்து முடித்த பட்டதாரிகள், படிப்பை பாதியில் கைவிட்டோர் இந்த தொழிலில் இப்போது அதிக ஆர்வமுடன் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு சரியான பயற்சி அளிக்கிறது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி மற்றும் ஆய்வு மையம்.
பயிற்சி நடைபெறும் தேதி:
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி சாலையிலுள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் நவம்பர் 24-இல் வெள்ளாடுகள் வளர்ப்பு பயிற்சி முகாமும் , நவம்பர் 26-இல் கறவை மாடுகள் வளர்ப்பு பயிற்சி முகாமும் நடைபெறுகிறது. ஆர்வமுள்ள கால்நடை வளர்க்கும் விவசாயிகள், சுய தொழில் துவங்க ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் இப்பயிற்சிகளில் கலந்து கொண்டு பயனடையலாம்.
தொடர்புக்கு:
ஆர்வமுள்ளோர் 0452-2483903 - இல் தொடர்பு கொண்டு விபரம் அறியலாம். பயிற்சிக்கு வருவோர் கட்டாயம் முககவசம் (Mask) அணிய வேண்டும் என ஆய்வு மைய தலைவர் சிவசீலன் கூறியுள்ளார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
விவசாயப் பண்ணை அமைக்க ஆசையா? ஆலோசனை மற்றும் பயிற்சிக்கு இங்கு அணுகவும்!
இனி கவலையில்லை! ஆடுகளை வாங்க, விற்க வந்துவிட்டது ஆடு வங்கித் திட்டம்!
Share your comments