1. கால்நடை

Rabbit Farming: முயல் ஒருநாளைக்கு இவ்வளவு தண்ணீர் குடிக்குமா?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Rabbit Farming

கோவை மாவட்டம் சூலூர் தாலுகா சுப்பராயன்பாளையம் பகுதியில் வசிக்கும் சுரேஷ், முயல் வளர்ப்பில் ஈடுபட்டு வருவதோடு, முயல்களிலிருந்து மதிப்புக் கூட்டு முறையில் வருமானம் பார்த்து வருகிறார். இதனைத் தொடர்ந்து முயல் வளர்ப்பிலுள்ள சாதகங்கள் மற்றும் பாதகங்கள் குறித்து முழுமையாக தெரிந்துக் கொள்வதற்காக சுரேஷ் அவர்களுடன் கலந்துரையாடியது கிரிஷி ஜாக்ரன்.

முயலுக்கான மார்க்கெட் எப்படி உள்ளது? என கேட்டதற்கு, ”முயல் பிசினஸ் பொறுத்தவரை, ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் சூப்பர். முயல் கறியை தவிர்த்து மதிப்புக் கூட்டு முறையிலும் முயல்களிலிருந்து லாபம் பார்க்கலாம். முயலின் தோல், முடி, இரத்தம், குடல், ஏன் அவற்றின் கழிவுக் கூட உரமாக பயன்படுத்தப்படும் நிலையில் முயலுக்கு நல்ல டிமாண்ட் மார்க்கெட்டில் எப்போதும் உள்ளது. முயலின் தோலினை ஏற்றுமதி செய்வதில் உள்ள பிரச்சினைகளால், அவற்றினை மட்டும் சரியாக லாப நோக்கில் கொண்டு செல்ல முடியவில்லை. மற்றபடி எல்லா வகையிலும் நான் மதிப்புக் கூட்டு முறையில் ஈடுபட்டு வருகிறேன்.” என்றார்.

Rabbit hair oil- நல்ல வரவேற்பு:

தொடர்ந்து உரையாடிய சுரேஷ் தெரிவிக்கையில், “முயல் இரத்தத்திலிருந்து மனிதர்கள் பயன்படுத்தக்கூடிய ஹேர் ஆயில் தயாரிக்கிறோம். அதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. முயல் கறியினை சிறியவர்கள் முதல் பெரியவர் வரை தாரளமாக சாப்பிடலாம். ஜீரோ சதவீத கொழுப்பு, அதிகப்படியான கலோரி மற்றும் புரோட்டின் முயல்கறியில் உள்ளது. மருத்துவர்களும் இப்போது முயல்கறி உண்ண பரவலாக பரிந்துரைக்கிறார்கள்.”

“முயல் வளர்ப்புக்கு கூண்டு முறை நல்ல பலன் தரும். இயற்கையாக வெட்ட வெளியில் வளர்ப்பது முயல் பிசினஸ் தோல்வியடைய காரணம் என்றே சொல்லலாம். இப்போ நம்ம கம்பி வகையிலான கூண்டுகளில் முயல்களை பராமரித்து வருகிறோம். ஒரு கூண்டுக்கு எப்படி பார்த்தாலும் மினிமம் 15,000 ரூபாய் வரை முதலீட்டு செலவு வந்துடும்."

"வளர்ந்த நிலையிலான 10 முயல்கள் வரை ஒரு கூண்டில் விட முடியும். மரத்தால் கூண்டு அமைப்பது வேலைக்கு ஆகாது. முயல்கள் எளிதில் கடித்து வெளியே வந்துவிடும். முதலில் முயல் வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் ஒன்றே நன்கு புரிந்துக் கொள்ள வேண்டும், காட்டு முயலுக்கும் வளர்ப்பு முயலுக்கும் இடையே ஏகப்பட்ட வித்தியாசம் உள்ளது” என்றார்.

Read also: Pig farming- பன்றிகளுக்கு விதைநீக்கம் எப்போது செய்யலாம்?

முயல் இவ்வளவு நீர் அருந்துமா?

நாங்க கூண்டுக்குள்ளே பைப்லைன் மூலம் முயலுக்கான நீரினை கொண்டு செல்கிறோம். என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன், நல்ல வளர்ந்த முயல் முக்கால் லிட்டர் (650 ml) வரை தினசரி நீர் அருந்தும். வெயில் காலத்தில் 1 லிட்டர் வரை கூட குடிக்கும். காலையில் பிண்ணாக்கு போன்ற அடர் தீவனமும், மாலை வேளையில் மக்காச்சோளம், வேலிமசால் போன்ற பசுந்தீவனங்களையும் அளித்து வருகிறோம்”.

முயல் வளர்ப்பினைப் பொறுத்தவரை காற்றோட்டமான பகுதி ரொம்ப அவசியம். முயல் பண்ணையினை பராமரிக்க அதிகளவிலான ஆட்கள் எல்லாம் தேவையில்லை. ஆட்டோமெட்டிக் முறையில், பைப் வழியாக முயல் அருந்த தண்ணீர் போயிடும். கூண்டு வளர்ப்பு முறையில் 2000 முயல்களை பராமரிக்க ஒரு நல்ல பணியாள் போதும்: என்றார் சுரேஷ்.

Read also: Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா?

முயல்களை தாக்கும் சொரியாஸிஸ்:

இறுதியாக முயலினை பெரிதும் தாக்கக்கூடிய நோய் என்ன? அதனை கட்டுப்படுத்த என்ன மாதிரியான முறைகள் பின்பற்றுகிறீர்கள் என கேள்வி எழுப்பினோம். அதற்கு, ”சொரியாஸிஸ் தான் முயல்களை பெரிதும் தாக்கும் நோய்னு சொல்லலாம். இது பரவும் தன்மைக் கொண்டது. காது மற்றும் மூக்கு பகுதிகளில் படர்தாமரை போன்று வரும். அதனை முயல்கள் சொரியும் போது, அவை அருகிலுள்ள முயலுக்கும் பரவ வாய்ப்புள்ளது. பின் எப்பாவது கழிச்சல் வரும். அவை பெரிய பிரச்சினைகளை உண்டாக்குவதில்லை."

" Ivermectin injection- முயல்களுக்கு செலுத்தி தான் ஆக வேண்டும். சிறிய முயலாக இருந்தால் 0.5ml, வளர்ந்த முயலாக இருந்தால் 1 ml வரை Ivermectin injection அளித்தால் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். என்னைப் போன்று, பெரியளவில் முயல் பண்ணையினை பராமரிப்பவர்களுக்கு மஞ்சள் பயன்படுத்துவது போன்ற இயற்கை வழி மருத்துவமுறைகள் எல்லாம் ஒத்துவராது” என்றார்.

Rabbit farm - suresh

விவசாயிகள் மத்தியில் முயல் வளர்ப்பை பெரியளவில் கொண்டு செல்ல வேண்டும் என்கிற எண்ணம் உள்ளது எனத் தெரிவித்த சுரேஷ், நிச்சயம் எதிர்க்காலத்தில் முயல் வளர்ப்பு மிகப்பெரிய தொழிலாக மாறும், அதற்கு நான் ஒரு முக்கிய காரணமாக இருப்பேன் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Read more:

12th Result 2024: வெளியானது ப்ளஸ் 2 ரிசல்ட்- பாட வாரியாக தேர்ச்சி எவ்வளவு?

TN ePass- நீலகிரி மற்றும் கொடைக்கானல் போறீங்களா? வந்தாச்சு புது ரூல்!

English Summary: unknown and super interesting facts in Rabbit farming Published on: 06 May 2024, 03:53 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.