தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கால்நடைகளுக்குத் தடுப்பூசிப் போட நடவடிக்கை எடுக்கப்படும் என கால்நடைதுறை இணை இயக்குநர் தெரிவித்து உள்ளார்.
நோய் தாக்கும் அபாயம் (Risk of disease)
கோடை காலம் கால்நடைகளைப் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. ஏனெனில், கால்நடைகளை முழுமையான மேய்ச்சலுக்கு விட முடியாது என்பதால், தீவனத்தட்டுப்பாடு, உடல் சூடு பிரச்னை என பல பிரச்னைகள் தலைதூக்குவது வழக்கம்.
எனவே நோய்களில் இருந்து, கால்நடைகளைப் பாதுகாப்பதற்காக தடுப்பூசி போட வேண்டியது மிக மிக அவசியம்.
இந்நிலையில், தடுப்பூசி போடுவது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட கால்நடை துறை இணை இயக்குனர் நடராஜ்குமார் கூறுகையில்,
தடுப்பூசி (Vaccine)
ஒவ்வொரு பருவகாலத்திற்கும்.அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப, கால்நடைகளுக்கு நோய்கள் ஏற்படுவது வழக்கம்.
அதைத் தடுக்கும் வகையில், தடுப்பூசி போடநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பூச்சிகள் (Insects)
குளம், குட்டைகளில் தேங்கும் தண்ணீரில் பூச்சிகள் இருக்கும். அந்த தண்ணீரை கால்நடைகள் குடிக்கும்போது, அதன் வயிற்றில் பூச்சிகள் வளரும்.
அதேபோல், ஆடுகள் பற்களை உண்ணும் போது, அதில் உள்ள கிருமிகளால் துள்ளுமாரி நோய் ஏற்படும்.
எந்த பகுதிகளில், கால்நடைகளுக்கு அதிக நோய் தாக்கம் இருக்கும் என்பது கண்டறியப்பட்டு, அதற்கு தகுந்த தடுப்பூசி போடப்படும் இப்பணி தேர்தலுக்குப் பின் துவங்கும்.
400 பயனாளிகள் (400 beneficiaries)
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில், நடப்பாண்டு விலையில்லா பசு மாடுகள், 400 பயனாளிகளுக்கு வழங்கப் பட்டுள்ளன.
ஆடுகள், 6.898 பயனாளிகளுக்கும், புறக்கடை கோழிக்குஞ்சுகள், 5.200 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுக்குத் தடுப்பூசி போடப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
அரசின் இலவச வெள்ளாடு திட்டம்! விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் உள்ளே!
Share your comments