1. கால்நடை

வெள்ளாடுகளில் மடி நோயைத் தடுக்க கால்நடை மருத்துவர் அறிவுரை!

KJ Staff
KJ Staff
Goat
Credit : Kalani Poo

நம் வருமானத்தைப் பெருக்குவதற்கு சிரமம் இல்லாத மிக எளிய தொழில் தான் ஆடு வளர்ப்பு. அதிலும் வெள்ளாடு வளர்ப்பில் நல்ல இலாபம் கிடைக்கும். வெள்ளாடுகளில் மடி நோய் உண்டாவது இயல்பு தான். சரியான தடுப்பு முறைகளைக் கையாண்டால், மடி நோயினைக் கட்டுப்படுத்தி விடலாம்.

வெள்ளாடு மடி நோய் தடுப்பு

பால் உற்பத்தி (Milk production) செய்யும் வெள்ளாடுகளில், மடி நோய் வரும். இது, பால் சுரப்பு திசுக்களில் உருவாகும் ஒரு வித அழற்சி. குறிப்பாக, தலைச்சேரி ஆடுகளை அதிகம் பாதிக்கும் என்று வெள்ளாடு மடி நோய் தடுப்பு குறித்து, ஏனாத்துார் உழவர் பயிற்சி மைய தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் சி.சவுந்திரராஜன் (Sondhirarajan) கூறினார்.

அறிகுறிகள்:

நுண்ணுயிரிகள் தாக்குவதால், காம்புகள் வீங்கிய நிலையில், சிவப்பு நிறமாக மாறி, சூடாக இருக்கும். மேலும், பால் மடியை, உரிமையாளரை கூட தொடவிடாது. நோய் தாக்கிய ஆட்டின் பால், பழுப்பு நிறம் (Brown) மற்றும் ரத்தமாக வரும்.

தடுப்பு முறை:

  • வெள்ளாடுகளில் மடி நோயைத் தடுக்க, அடிக்கடி பால் கறந்து கீழே விட வேண்டும்.
  • சாக்பீஸ், சோற்றுக்கற்றாழை, மஞ்சள், எலுமிச்சை சாறு கலந்து, காம்புகள் மீது தடவ வேண்டும்.
  • கால்நடை மருத்துவரின் ஆலோசனைபடி, நோய் எதிர்ப்பு மருந்துகள் (Antibiotics) ஊசி வழியாகவோ அல்லது மாத்திரை வழியாகவோ கொடுக்கலாம்.
  • மம்மாடியம் என்ற பவுடரை தண்ணீரில் கலந்து உருண்டைகளாக்கி, ஐந்து நாட்கள் வாய்வழியாக கொடுத்தால் சரியாகும்.

தொடர்புக்கு
95005 63853

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு முதல் முறையாக காப்பீடு!

பிப்ரவரி மாதத்தில் நாட்டு பசுக்களின் நலன் சார்ந்த அறிவியல் தொடர்பாக ஆன்லைன் தேர்வு!

காரைக்காலில் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டம்! வேளாண்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்!

English Summary: Veterinarian advises to prevent fold disease in goats! Published on: 07 January 2021, 10:17 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.