தஞ்சாவூரில் கறவை பசுக்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கான தீர்வுகள் குறித்த ஒரு நாள் பயிற்சி (One Day Training) நடைபெற உள்ளது.
வரும் 16ம் தேதி நடைபெறும் இப்பயிற்சியில் கால்நடை விவசாயிகள் தவறாமல் கலந்துகொண்டு, பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
கால்நடை வளர்ப்பில், அவற்றில் இனப்பெருக்கம் சார்ந்த பிரச்னைகள் பிரதானமாகக் கருதப்படுகிறது. இதுதவிர, நோய் தடுப்பு நடவடிக்கைகள், தீவன மேலாண்மை என பல்வேறு விஷயங்கள் உள்ளன.
பால் மேலாண்மை (Milk management)
அந்த வகையில், கறவைப் பசுக்களில் பால் மேலாண்மை என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த பசுக்களை வளர்க்கும்போது மேற்கொள்ளும் சவால்கள் குறித்தும், அதில் இருந்து மீண்டு வர உதவும் வழிமுறைள், யுக்திகள் குறித்து தஞ்சாவூரில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இது குறித்து தஞ்சாவூர் கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆய்வு மையத் தலைவர் கோபகத்சன் தெரிவித்திருப்பதாவது:
-
தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது.
-
இந்த ஆராய்ச்சி மையத்தில், வரும் 16ம் தேதி கறவைப் பசுக்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு அளிப்பது குறித்த இலவச பயிற்சி நடைபெறுகிறது.
-
காலை 10 மணி முதல் மாலை வரை பயிற்சி நடத்தப்படுகிறது.
-
விருப்பமுள்ள விவசாயிகள் இந்த பயிற்சியில் கலந்துகொண்டுப் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
-
கூடுதல் விவரங்களுக்கு 8754748488, 9566082013 ஆகிய செல்போன் எண்களில் தொடர்ப்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க....
மா மரங்களைத் தாக்கும் கற்றாழைப்பூச்சி- பாதுகாக்க யோசனை!
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை- 40,000 இடங்களில் ஆய்வு!
நெல் அறுவடை இயந்திர வாடகை உயர்வு - சிக்கலில் விவசாயிகள்!
Share your comments