1. கால்நடை

கால்நடை மருத்துவ படிப்புக்கு ஆன்லைனில் 26 வரை விண்ணப்பிக்கலாம்

Deiva Bindhiya
Deiva Bindhiya
Tamil news Apply online for the veterinary course from 12th

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்த நாடு, சேலம், தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி, வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் இருப்பது குறிப்பிடதக்கது.

இந்த கல்லூரிகளில் 5½ ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்.சி-ஏ.எச்) 580 இடங்கள் இருக்கின்றன. சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 63 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுள்ளன. தமிழகத்துக்கு 517 இடங்கள் உள்ளன என்பது குறிப்பிடதக்கது.

திருவள்ளூர் மாவட்டம் கோடுவளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (B.Tech) 40 இடங்கள், பால்வள தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (B.Tech) 20 இடங்கள் உள்ளன. இதில், உணவுத் தொழில் நுட்ப பட்டப்படிப்புக்கான (B.Tech) 40 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 6 இடங்கள் (15 சதவீதம்) போக, மீதமுள்ள 34 இடங்கள் மாநில அரசுக்கு இருப்பது குறிப்பிடதக்கது.

இதேபோல், ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (B.Tech) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப்படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டதாகும்.

இந்த நிலையில் பி.வி.எஸ்.சி.-ஏ.எச் மற்றும் B.Tech படிப்புகளுக்கு 2022-23-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் வரும் 12-ந்தேதி காலை 10 மணி முதல் 26-ந்தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் வாரிசுகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினர் ஆகியோர்களுக்கான இடஒதுக்கீடு இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விபரங்களையும் இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த படிப்புகளுக்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க:

அடுத்ததாக குருணை ஏற்றுமதிக்கு தடை விதித்தது மத்திய அரசு: ஏன்?

மின் கட்டண உயர்வு: யூனிட் வாரியாக எவ்வளவு அதிகரித்துள்ளது?

English Summary: You can apply online till 26th for veterinary course Published on: 10 September 2022, 11:36 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.