இந்திய அஞ்சல், தகவல் தொடர்பு அமைச்சகம் சார்பில் இந்திய தபால் துறையில் குரூப் சி பிரிவின் கீழ் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் பிற பதவிகளுக்கு என மொத்த 1899 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. காலிப்பணியிடங்கள் குறித்த முழு விவரம், விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதி, வயதுவரம்பு தொடர்பான விவரங்கள் பின்வருமாறு-
மேற்குறிப்பிட்ட 1899 காலிப்பணியிடங்களுக்கு நவம்பர் 10 ஆம் தேதி முதல் பலர் விண்ணப்பித்து வரும் சூழ்நிலையில், பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசிநாள் வருகிற டிசம்பர் 9 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள டிசம்பர் 10 முதல் டிசம்பர் 14 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான dopsportsrecruitment.cept.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1899 பணியிடங்களின் விவரம் பின்வருமாறு-
- தபால் உதவியாளர்- 598
- sorting assistant - 143
- தபால்காரர்- 585
- அஞ்சல் காவலர் (mail Guard)- 3
- Multi Tasking Staff (MTS)- 570
இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு 2023: தகுதிக்கான அளவுகோல்கள்
கல்வி தகுதி:
- அஞ்சல் உதவியாளர் / sorting assistant பதவிக்கு - விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினியில் பணிபுரிவது பற்றி அறிந்திருக்க வேண்டும்.
- தபால்காரர் / அஞ்சல் காவலர் பதவிகளுக்கு: விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தின் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் மற்றும் 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு மேல் உள்ள பாடங்களில் ஒன்றாக சம்பந்தப்பட்ட அஞ்சல் வட்டம் அல்லது பிரிவின் உள்ளூர் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Multi Tasking Staff (MTS) பதவிக்கு - விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு 2023: வயது வரம்பு
தபால் உதவியாளர், sorting assistant, தபால்காரர், அஞ்சல் காவலர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பதாரர் 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் பதவிக்கு, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு 25. அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.
வேளாண் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் காலிப்பணியிடம்- முழு விவரம் காண்க
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
தகுதியின் அடிப்படையில் வேட்பாளர் தேர்வு நடைபெறும். ஆன்லைன் விண்ணப்பப் போர்ட்டலில் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் மட்டுமே தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். மேலும் தகுதிப் பட்டியலைத் தயாரிப்பதற்கு முன் ஆஃப்லைன் பயன்முறையில் கூடுதல் தகவல்கள் எதுவும் பெறப்படாது.
விண்ணப்பிக்கும் முறை:
- dopsportsrecruitment.cept.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்
- 'ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்' என்ற அறிவிப்பு இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுக்கவும். (Ex: sorting assistant)
- இது உங்களை உள்நுழைவு (login) பக்கத்திற்கு திருப்பிவிடும்
- உங்களைது மெயில் முகவரி, மொபைல் எண் போன்றவற்றை உள்ளீடு செய்யவும்
- விண்ணப்ப படிவத்தை கவனமாக நிரப்பவும் தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, 'சமர்ப்பி' பொத்தானைக் கிளிக் செய்யவும்
- எதிர்கால குறிப்புக்காக விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.
விண்ணப்பக் கட்டணம்:
பெண் விண்ணப்பத்தாரர்கள், திருநங்கைகள் மற்றும் பட்டியல் சாதியினர் (SC), பழங்குடியினர் (ST), உடல் ஊனமுற்றோர் (PwBD) மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் (EWS) ஆகியவற்றைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. மற்ற வகை விண்ணப்பதாரர்கள் ரூ. 100/- செலுத்த வேண்டும்.
இந்திய அரசின் பழமை வாய்ந்த அதே நேரத்தில் முக்கியத்துவம் துறைகளில் முதன்மையானது தபால் துறை. மாநிலம் வாரியாக ஆட்சேர்ப்பு, பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தப்பட்ச ஊதியமாக ரூ.18,000 தொடங்கி - அதிகப்பட்சமாக ரூ.81,100 வரை இப்பணியிடங்களுக்கான சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கீழ்க்காணும் லிங்கினை க்ளிக் செய்யவும்.
இதையும் காண்க:
பிஎம் கிசான் திட்டத்தில் e-KYC செய்யாத விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்
Share your comments