உலகம் முழுவதும் அச்சுறுத்திவந்த கொரோனா வைரஸ்ஸில் இருந்து தற்காத்துக்கொள்ளக் கண்டுப்பிடிக்கப்பட்ட தடுப்யூசியைப் போட்டுக்கொண்ட 23 பேர் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது நடந்தது நம் நாட்டில் இல்லை, நார்வேயில்...
ஐரோப்பிய நாடான நார்வேயில் கடந்த மாதம் இறுதி முதல் அமெரிக்க நிறுவனமான பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
33,000 தடுப்பூசி (33,000 vaccinated)
நார்வேயில் இதுவரை 33 ஆயிரத்திற்கு அதிகமானோருக்கு பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும், வயதானோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நார்வேயில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 23 பேர் உயிழந்துள்ளனர்.
பக்கவிளைவுகளால் பலி (Killed by side effects)
தடுப்பூசி போட்டுக்கொண்ட குறுகிய காலத்திற்குள் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. 23 பேரில் 13 பேர் தடுப்பூசியால் ஏற்பட்ட பக்கவிளைவுகளால் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
எஞ்சியவர்களின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. உயிரிழந்தவர்கள் நார்வேயில் உள்ள நர்சிங் ஹோம்களில் வாழ்ந்த முதியவர்கள்.
இவர்கள் பைசர் தடுப்பூசியை பயன்படுத்திய பின் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளை சந்தித்துள்ளனர். உயிரிழந்த அனைவரும் 80-வயதிற்க்கு மேற்பட்டவர்கள் ஆகும். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 29 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளது என நார்வே அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பைசர் தடுப்பூசியை கவனமாக பயன்படுத்த நார்வே அரசு அறிவுறுத்தியுள்ளது. வயதானவர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்துவதை குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 23 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் பைசர் தடுப்பூசியின் வினியோகத்தை அந்நிறுவனம் குறைத்துள்ளது.
மேலும் படிக்க...
மாதம் ரூ.42 செலுத்தினால் ஆயுள் வரை ஓய்வூதியம்- அடல் பென்சன் யோஜனா திட்டம்!
பொங்கலுக்கு வலுசேர்க்கும் மண்பானைகள் - தயாரிப்பு பணிகள் தீவிரம்!
ஆரோக்கியத்தைப் பெற வேண்டுமா? பாரம்பரிய உணவுகளுக்குத் திரும்புங்கள்!
Share your comments