இனிமேல் ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று மாநிலஅரசு அறிவித்துள்ளது. சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாயைக் கடந்துவிட்டதால், அதிருப்தி அடைந்திருந்த பொதுமக்களுக்கு இந்த அறிவிப்பு ஆறுதலாக அமைந்துள்ளது.
அண்மைகாலமாக அதிகரித்து வரும் சமையல் சிலிண்டர் விலை உயர்வு மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதனால் நாட்டு மக்கள் அனைவரும் விலை உயர்வு பிரச்சினையால் தவித்து வருகின்றனர். குறிப்பாக சமையல் சிலிண்டர் விலை 1000 ரூபாயைத் தாண்டிவிட்டது. ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை உயர்ந்து பொதுமக்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.
அதிரடி உத்தரவு
இந்தச்சூழலில் உத்தரகாண்ட் அரசு, தனது மாநில மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. இதன்படி, அவர்களுக்கு ஒரு வருடத்தில் மூன்று சிலிண்டர்கள் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பணம் செலுத்தாமலேயே 3 சிலிண்டர்கள் கிடைக்கும். உத்தரகாண்ட் மாநிலத்தின் புஷ்கர் சிங் தாமி அரசு இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
3 சிலிண்டர் இலவசம் (3 cylinder free)
உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைத்தால், ஏழைக் குடும்பங்களுக்கு மூன்று எல்பிஜி சிலிண்டர்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என பிஜேபி கட்சி தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி அளித்திருந்தது. இதையடுத்து அக்கட்சி தற்போது, மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது.
கூடுதல் செலவு (Extra cost)
மூன்று இலவச சிலிண்டர்கள் வழங்கும் திட்டத்திற்கு புஷ்கர் சிங் தாமியின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் அரசு கருவூலத்தில் ஆண்டுக்கு ரூ.55 கோடி சுமை ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அரசின் இந்த முடிவால் 1.84 லட்சம் பேர் பயன் பெறுவார்கள். அம்மாநிலத்தில் உள்ள ஒரு லட்சத்து 84 ஆயிரம் பேர் கொண்ட அந்த்யோதயா அட்டைதாரர்கள் மட்டுமே இத்திட்டத்தின் பலனைப் பெறுவார்கள்.
பொதுமக்கள் வரவேற்பு
அரசின் இந்த அறிவிப்பை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். சிலிண்டர் விலை உயர்வு பிரச்சினைகளுக்கு மத்தியில் ஆண்டுக்கு மூன்று சிலிண்டர் இலவசம் என்பது பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. மற்ற மாநிலங்களிலும் இத்திட்டம் வரவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் படிக்க...
முழு முட்டை Vs வெள்ளைக்கரு – எது ஆரோக்கியமானது?
நீரிழிவு நோயை தடுக்கும் பழைய சோறு - யாரும் அறிந்திராத உண்மை!
Share your comments