1. Blogs

இந்திய அளவிலான பல்கலைக்கழகங்களின் தரவரிசைப்பட்டியல்-TNAUவிற்கு 3ம் இடம் !

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
3rd place for TNAU in India rankings!
Credit : Times of India

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை தென்னிந்தியாவில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகங்கிடையே மூதலிடத்தையும், இந்திய அளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளதாகக் கல்வி உலகம் பத்திரிகை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் ஆய்வு (Annual review)

ஒவ்வொரு ஆண்டும் கல்வி உலகம் இதழானது நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கான ஆய்வில் பல்வேறு காரணகிள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

தகுதிகள் (Qualifications)

அதில் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களின் தகுதி மற்றும் போதிக்கும் திறன், கல்வி நிறுவனத்தில் ஆசிரியர்களின் நலம் மற்றும் மேம்பாடு, புதிய வகை ஆராய்ச்சி திட்டங்கள் மற்றும் கண்டுபிடுப்புகள், பாடத்திட்டங்கள் மற்றும் தரமான புதிய கற்பித்தல் முறைகளை பயன்படுத்துதல் உள்ளிட்டக் காரணிகள் அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றன.

காரணிகள் (Factors)

மேலும் பாடத்திட்டம் சார்ந்த தொழில்நிறுவனங்களுடான புரிந்துணர்வு ஒப்பந்தம், கல்லூரி வளாக வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்துதல், தரம் மற்றும் வளாக கட்டமைப்புகளை உருவாக்குதல், உலகமயமாக்குதல், தலைமைப்பண்புகள் மற்றும் நிர்வாகத்திறனை ஊக்குவித்தல் மற்றும் காலத்திற்கேற்ப கல்வி பாடத்திட்டங்கள் அகியவற்றின் அடிப்படையில் இந்திய அளவில் கல்வி நிறுவனங்களை ஆய்வுக்கு உட்படுத்தி அதன் தரவரிசை பட்டியல் கல்வி உலகம் இதழால் வெளியிடப்பட்டது.

3-வது இடம் (3rd place)

இதில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் தென்னிந்திய வேளாண்மைப் பல்கலைக்கழகங்களுக்கிடையே முதலிடத்தையும், இந்தியாவில் உள்ள வேளாண்மைப்பல்கலைக்கழகங்களில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

53-வது இடம் (53rd place)

அதேபோல், இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த பல்கலைக்கழகங்களில் 53 ஆவது இடத்தை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பெற்றுள்ளதாக, அதன் துணைவேந்தர் முனைவர்.நீ.குமார் தெரிவித்துள்ளார்.

முன்னேற்றிய காரணிகள் (Advanced Factors)

இப்பல்கலைக்கழகம் கடந்த ஆண்டுகளில் 72 ஆவது இடத்தில் இருந்தது. துணைவேந்தரின் இடைவிடா அறிவுறுத்தலாலும், அனைத்து ஆசிரியர்களின் உழைப்பாலும் தரமான வேனாண் கல்வி, மாணவர்களின் சிந்தனை திறன் மற்றும் செயலாக்கத்தை மேம்படுத்துதல், இப்பல்கலைக்கழக விஞ்ஞானிகள், தேசிய மற்றும் உலக அளவில் ஆராய்ச்சி திட்டங்களுக்கு நிதி பெறுவது மற்றும் சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகளை உலகில் சிறந்த ஆராய்ச்சி இதழ்களில் பிரசுரித்தது போன்ற காரணங்களினால் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

விரைவில் முதலிடம் (Top soon)

இப்பலைக்கழகமானது, வரும் காலங்களில் பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள், ஆசிரியல்லாதோர் ஆகியோரின் அயராத உழைப்பினால், மொத்த பல்கலைக்கழகங்களிடையே முதல் பத்து இடங்களிலும், வேளாண்மைப் பல்கலைக்கழகங்கிடையே முதல் இடத்தையும் பிடிக்கும்.

இவ்வாறு பல்கலைக்கழக துணைவேந்தர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் படிக்க...

சமச்சீர் உரப்பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு பயிற்சி!

பயிர்களைப் பாதுகாக்க உயிர்வேலி அமைப்பு முறையை விவசாயிகள் கையாள வேண்டும்! இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பார்ப்பு!

நாட்டுக்கோழி வளர்ப்பில் முட்டையின் சத்துக்களுக்கு தேவையான தீவனங்கள்!

English Summary: 3rd place for TNAU in India rankings! Published on: 22 June 2021, 09:47 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.