இந்தியாவில் அடுத்த 3 – 4 ஆண்டுகளில், 48 ஆயிரத்திற்கும் அதிகமான மின்சார வாகன ‘சார்ஜ்’ நிலையங்கள் அமைய உள்ளதாக, தர நிர்ணய நிறுவனமான ‘இக்ரா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பொது இடங்களில் 2,000த்திற்கும் குறைவாகவே மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் நிலையங்கள் உள்ளன.
மின்சார சார்ஜ் மையங்கள் (Electric Charge Center)
வரும் 2024 – 2025 ஆம் நிதியாண்டில், மின்சாரத்தில் இயங்கும் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை முறையே, 15 சதவீதம் மற்றும் 30 சதவீதம் அதிகரிக்கும். மின்சார பஸ் போக்குவரத்து 8 – 10 சதவீதம் உயரும். அதற்கேற்ப மின் சார்ஜ் நிலையங்கள் அனைத்து பகுதிகளிலும் அமைக்க வேண்டும்.
இதற்காக மத்திய அரசு, ‘பேம்’ திட்டத்தின் கீழ், 1,300 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இது தவிர ஏராளமான தனியார் நிறுவனங்கள் மின் வாகன சார்ஜ் மையங்களை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளன.அதன் அடிப்படையில் அடுத்த 3 – 4 ஆண்டுகளில் 14 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 48 ஆயிரத்திற்கும் அதிகமான மின் வாகன சார்ஜ் மையங்கள் அமைய உள்ளன.
இதற்கான பெரும்பாலான சாதனங்கள், சீனா, தைவான் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகின்றன. இவற்றை உள்நாட்டில் தயாரித்தால், சார்ஜ் நிலையங்களை அமைக்கும் செலவு குறையும்.
மேலும் படிக்க
உரிய காரணமின்றி இரயிலில் அபாய சங்கிலியை இழுத்தால் ஓராண்டு சிறை!
பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து இயற்கை எரிவாயு விலையும் இருமடங்கு உயர்வு!
Share your comments