NPS அல்லது தேசிய சேமிப்புத் திட்டம் என்பது மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மிகச் சிறந்த முதலீட்டுத் (Investment) திட்டமாகும். இத்திட்டம் முதலில் 2004ஆம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்காக மட்டுமே தொடங்கப்பட்டது அதன் பின்னர் 2009ஆம் ஆண்டில் அனைத்து பொதுமக்களுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டது. 18 முதல் 65 வயது வரை உள்ள எந்தவொரு இந்தியக் குடிமகனும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
சிறப்பம்சங்கள்!
தேசிய பென்சன் திட்டத்தின் கீழ் இப்போது 8 முதல் 10 சதவீதம் வரையில் வட்டி லாபம் (Profit) கிடைக்கிறது. இதுமட்டுமல்லாமல், இத்திட்டத்தின் கீழ் வருமான வரிச் சட்டம் 80சி-இன் கீழ் வரிச் சலுகை (Tax concession) வழங்கப்படுகிறது. இதன்படி, ரூ.15 லட்சம் கோடி வரையில் வரிச் செலவு மிச்சமாகும். இத்திட்டத்தில் டையர் 1, டையர் 2 என இரண்டு பிரிவுகள் உள்ளன. டையர் 2 பிரிவில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சேமிப்புப் பணத்தை எடுக்கலாம்.
ரூ.60,000 பென்சன்
தேசிய பென்சன் திட்டத்தின் (NPS) நீங்கள் தினமும் 60 ரூபாய் சேமித்து வந்தால் உங்களது ஓய்வுக் காலத்தில் மாதத்துக்கு ரூ.5,000 பென்சன் (Pension) கிடைக்கும். அதாவது வருடத்துக்கு ரூ.60,000 பென்சன் வாங்கலாம். தொடர்ச்சியான சேமிப்பின் மூலம் உங்களது 60ஆவது வயதுக்குப் பிறகு நிலையான பென்சன் தொகையைப் பெறமுடியும்.
கணக்கு தொடங்கும் முறை
enps.nsdl.com/eNPS/NationalPensionSystem.html என்ற eNPS இணையதளத்தில் சென்று நீங்கள் முதலில் பதிவு (Register) செய்ய வேண்டும். மொபைல் எண், ஆதார் எண், பான் எண் உள்ளிட்ட விவரங்கள் இணைக்கப்பட வேண்டும். உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி (OTP) நம்பர் வரும். அதைப் பதிவிட வேண்டும். அதன் பின்னர் உங்களுக்கு நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் (PRAN) ஒதுக்கப்படும். அதை வைத்துத்தான் நீங்கள் தேசிய பென்சன் கணக்கில் லாகின் செய்ய முடியும். 'eSign' வசதியைப் பயன்படுத்தி நீங்கள் PRAN எண்ணை வைத்து உள்நுழைய வேண்டும். இதற்கும் ஓடிபி அனுப்பப்படும். ஆதார் இணைப்புக்குப் (Aadhar link) பிறகு உங்களது விண்ணப்பம் ஆன்லைனில் ஏற்றுக்கொள்ளப்பட்டு சைன் இன் ஆகிவிடும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என மத்திய அரசு உறுதி!
பட்ஜெட்டில் நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அறிவிப்பு! வீடு வாங்குவோருக்கு அருமையான வாய்ப்பு!
விவசாயிகள், வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு!
Share your comments