அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருந்தனர். இந்த வேளையில், திடீரென அகவிலைப்படியை உயர்த்தி, தங்கள் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்திருக்கிறது இந்த மாநில அரசு.
அடிச்சது அதிஷ்டம்
ஆமாம். மேற்கு வங்க மாநில அரசுதான் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதனால், அம்மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன்படி மேற்கு வங்க மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 6 % உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் அமல்
இந்த அகவிலைப்படி உயர்வு வரும் மார்ச் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
6-வது ஊதியக்குழு
6-வது ஊதியக்குழுவின் பரிந்துரையின்பேரில் இந்த நடவடிக்கையை முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு எடுத்துள்ளது.
போதாது
முன்னதாக 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3% அகவிலைப்படி உயர்வை மேற்கு வங்க அரசு அறிவித்திருந்தது. இருப்பினும் இந்த அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக இல்லை என ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க…
Share your comments