கூடுதல் உடமைகளை கொண்டு செல்லும் பயணிகளிடம் இருந்துக் கட்டணம் வசூலிக்க இந்தியன் ரயில்வேத் திட்டமிட்டுள்ளது. இதன்படி, இனிமேல், தனிக் கட்டணம் செலுத்தாமல் நீங்கள் கூடுதல் உடமைகளை எடுத்துச் சென்றால் 6 மடங்கு அபராதம் கட்ட நேரிடும் என்றும் இந்தியன் ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
பொதுவாக ரயில் பயணம் மிகவும் பாதுகாப்பானது என்பதைவிட, மிகவும் வசதியானது என்றே சொல்லாம். இரவு நேரப் பயணம், நம் காலத்தை சேமிக்க உதவுவதுடன், பேருந்துகளைக் காட்டிலும் அனைத்து வசதிகளும் ரயிலில் இருக்கின்றன. எனவே பயணம் என்று நினைக்கும்போது, ரயில் பயணமே பலரது விருப்பமாக இருக்கிறது.
எவ்வளவு கிலோ?
விமானத்தில் பயணம் செய்யும்போது நீங்கள் கொண்டு செல்லும் உடமைகளுக்கு தனிக்கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட கிலோ அளவு வரையில்தான் பயணிகள் இலவசமாக விமானத்தில் உடமைகளை எடுத்துச்செல்ல முடியும். குறிப்பாக ஒரு தனி நபர் விமானத்தில் பயணித்தால் 7 கிலோ வரை உள்ள உடமைகளை அவருடன் கொண்டு செல்லலாம்.
அதுபோலவே கூடுதலாக 25 கிலோ வரை உள்ள உடமைகளை விமானம் சுமந்து வரும். இதற்கும் கூடுதலாக உடைமைகள் இருந்தால் அதற்கு தனிக் கட்டணம் செலுத்த வேண்டும்.இதே நடைமுறையை தற்போது இந்தியன் ரயில்வேயும் கையில் எடுத்துள்ளது. கூடுதல் கட்டணம் செலுத்தாவிட்டால் 6 மடங்கு அபராதம் செலுத்தும் நிலை ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
எவ்வளவு இலவசம்?
ஏசி முதல் வகுப்பில் பயணித்தால் 70 வது கிலோ வரையில் இலவசமாக எடுத்துச் செல்லலாம். அதுவே ஏசி -2 டையர் வகுப்பில் பயணித்தால் 50 கிலோ வரையிலும் , ஏசி-3 டையர் வகுப்பில் பயணித்தால் 40 கிலோ வரையிலும் இலவசமாக எடுத்துச் செல்லலாம். அதுபோல ஸ்லீபர் வகுப்பில் (sleeper class) பயணித்தால் 40 கிலோ வரையிலும் செக்கண்டு கிளாஸில் பயணித்தால் 35 கிலோ வரையில் இலவசமாக கொண்டுச் செல்ல முடியும்.
இதற்கும் கூடுதலாக நீங்கள் எடுத்துச் சென்றால் குறைந்தபட்சமாக ரூ.30 -லிருந்து கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் ஏசி முதல் வகுப்பில் பயணிப்பவர்கள் அதிகபட்சமாக 150 கிலோ உடமைகளையும், ஏசி -2 டையர் வகுப்பில் பயணிப்பவர்கள் 100 கிலோ வரையிலும், , ஏசி-3 டையர் வகுப்பில் பயணிப்பவர் 40 கிலோ வரையிலும் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவர்.
அதுபோலவே ஸ்லீப்பர் வகுப்பில் பயணிப்பவர் அதிகபட்சமாக 80 கிலோ வரையிலும், செக்கண்ட் கிளாஸில் பயணிப்பவர் 70 கிலோ வரையிலும் கொண்டுச் செல்ல முடியும்.
புக் செய்வது எப்படி?
நீங்கள் கூடுதலாக உடமைகளை கொண்டு செல்ல விரும்பினால், உடமைகளை நன்றாக பேக் செய்து ரயில்வே உடமைகளை புக் செய்யும் அலுவலகத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும். நீங்கள் பயணிக்கும் ரயில் புறப்படும் அரை மணி நேரத்திற்கு முன்பாக உடமைகளை புக் செய்ய வேண்டும்.
மேலும் படிக்க...
Share your comments