நோய்த் தொற்று என்று வரும்போது, மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகளும் விதிவிலக்கு இல்லை என்கிற வகையில், ஐதராபாத் உயிரியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா 2-வது அலை (Corona 2nd wave)
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை வீசி வருகிறது. கடந்த ஆண்டை விட தற்போது, சூறாவளி போன்று சுழன்று அடிக்கிறது.
3.5 லட்சம் மக்கள் (3.5 lakh people)
தற்போதைய நிலையில் இந்த சூறாவளிக்குத் தினந்தோறும் இந்தியாவில் 3.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆக்ஸிஜன் தட்டுப்பாடு (Oxygen deficiency)
ஆக்சிஜன் இல்லாமலும், மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாமலும் தவித்து வருகிறார்கள். இதனால், எங்குப் பார்த்தாலும் கொரோனா நோயாளிகள் என்ற நிலையை நாம் நாள்தோறும் கடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
சிங்கங்களையும் சீண்டியது (Snatched the lions)
இந்த சூழலில் விலங்குகளையும் கொரோனத் தொற்று விட்டுவைக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது. ஐதராபாத் நேரு உயிரியல் பூங்காவில் உள்ள மிருகங்களுக்கும் கொரோனா தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. அங்கு 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆர்.டி.-பிசிஆர் பரிசோதனை (RT-PCR test)
சிங்கங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், ஆர்.டி.-பிசிஆர் பரிசோதனை (RT-PCR test) மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவுகள் மருத்துவர்களுக்கு மட்டுமல்லாமல், பூங்கா ஊழியர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது என்னவென்றால், கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதன் உடல்நிலை கண்காணிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாத் தொற்று, பூங்கா ஊழியர்கள் மூலம் சிங்கங்களுக்குப் பரவியதா, இல்லை வேறு எப்படியாவது பரவியதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க...
சில மாதங்களுக்கு இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கும்! சீரம் அதிகாரி அதிர்ச்சி தகவல்!
கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க 8 பள்ளிகள் ஒப்படைப்பு- ஈஷா நடவடிக்கை!
Share your comments