உலக விலையுயர்ந்த தேநீர்: தேநீருக்கு எவ்வளவு கொடுக்கலாம்? பொதுவாக தேநீரின் விலை ஐந்து ரூபாயில் இருந்து நிர்ணயம் செய்யப்படும்.
அதிக பட்சம் பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் 100 ரூபாய் , அதிகபட்சமாக ஆயிரம் ரூபாய் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் 9 கோடி டீ கேள்விப்பட்டிருக்கீர்களா?
ஆம், 9 கோடி ரூபாய்க்கு ஒரு டீ ,நாம் அறியப்போவது உலகின் விலையுயர்ந்த தேநீர் என்று புகழ் பெற்ற டா ஹாங் பாவோ (da-hong pao tea) டீ பற்றியே.
இது உலகின் மிக விலையுயர்ந்த தேநீறாகும் மற்றும் அது சீனாவை பூர்விகமாக கொண்ட தேயிலை இனத்தால் செய்யப்படுகிறது.
இது மிகவும் விலை உயர்ந்தது மற்றும் இந்த விலையில் நீங்கள் பல அடுக்கு மாடிகளை வாங்கலாம். பல சொகுசு வாகனங்களையும் வாங்கலாம்.
டா-ஹாங் பாவோ தேநீர் ஆரோக்கியத்திற்கு மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படுகிறது. இதை குடிப்பதால் கடுமையான நோய்கள் கூட குணமாகும் என்று கூறப்படுகிறது. இதுவே இந்த விலை உயர்வுக்குக் காரணம்.
ஒவ்வொருவரின் காலை வேளையும் தேநீர் அருந்துவதில் இருந்து தொடங்குகிறது. காலையில் டீ குடிக்காமல், நாள் முழுவதும் சோம்பலாக இருப்பவர்கள் அதிகம்.
சந்தையில் வெவ்வேறு விலைகளில் தேயிலை இலைகளைப் பார்த்திருப்பீர்கள். நீங்கள் பல விலையுயர்ந்த மற்றும் சில மலிவான தேயிலை இலைகளைப் பார்த்திருப்பீர்கள்.
இது தவிர இந்த தேயிலை இலையை வேறு எங்கும் காண முடியாது. இதன் மதிப்பு கோடிக்கணக்கில் உள்ளது.
ஒரு கிலோ தேயிலை 9 கோடி வரை விலை போகிறது.
இந்த தேயிலை இலை விலை அதிகமாக இருப்பதற்கு காரணம், எளிதில் கிடைக்காததுதான். இந்த தேயிலை செடிகள் சீனாவில் வெறும் ஆறுதான் உள்ளது.
அவர்களிடமிருந்தும், இந்த தேயிலை இலை ஆண்டு முழுவதும் மிகச் சிறிய அளவில் கிடைக்கிறது. டா-ஹாங் பாவோ தேயிலை இலைகள் மிகவும் சிறியவை.
அத்தகைய சூழ்நிலையில், அதன் வேர் இலைகள் மிகவும் விலை உயர்ந்தவை. இந்த இலை 10 கிராம் பல இடங்களில் 10 முதல் 20 லட்சம் ரூபாய் வரை கிடைக்கிறது.
அதன் இலைகள் ஒரு குறிப்பிட்ட மரத்திலிருந்து மட்டுமே அறுவடை செய்யப்படுகின்றன. இது சாதாரண தேயிலை இலைகள் போல் பயிரிடப்படவில்லை.
சீனா தேயிலைகளை வர்த்தகம் செய்வதன் மூலம் நல்ல லாபம் ஈட்டுகிறது.
இந்த டீயை உட்கொள்வதால் கடுமையான நோய்களைக் கூட குணப்படுத்தலாம்.
சீனாவில் காணப்படும் இந்த தேநீர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த தேநீர் குடிப்பதால் பல தீவிர நோய்களை குணப்படுத்த முடியும் என்று நம்பப்படுகிறது.
மேலும் படிக்க:
Share your comments