
சாலை ஓரங்களில், வானமே கூரையாக வாழும் சில பிச்சைக்காரகர்கள் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் தெருக்களில் பிச்சைஎடுத்துக்கொண்டே மாதம்தோறும் லட்சங்களில் வருமானம் ஈட்டிவருகிறார் இவர். லண்டன் தெருக்களில் பிச்சை எடுத்துக்கொண்டே மாதம் தோறும் லட்சங்களில் வருமானம் ஈட்டும் நபர்.
ஒரு பிச்சைக்காரர் தெருக்களில் வசித்து பிச்சை எடுத்துக்கொண்டே உலகின் முன்னணி நகரம் ஒன்றில் சுமார் 5 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட சொத்தையும் வைத்திருக்கிறார்.
ரூ.5 கோடி வீடு
இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த பிச்சைக்காரர் டோம். இவர் தற்போது தெருக்களில்தான் வசித்து வருகிறார். ஆனால் இவருக்கு அதே லண்டன் மாநகரில் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு சொத்தாக இருக்கிறது. இதில் இருந்து அவருக்கு மாதம் தோறும் வாடகையாக சுமார் 1.3 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. தற்போது தெருக்களில் பிச்சை எடுத்து வரும் டோம், லண்டனில் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தவர். இவர் பள்ளிப் படிப்பில் சிறந்து விளங்காமல் போனாலும், விளையாட்டுகளில் திறமை வாய்ந்தவர் என்பதால் உயர்கல்விக்கு ஸ்காலர்ஷிப் உதவியும் பெற்றார்.
போதை அசாமி
ஆனால், உயர்கல்வி பருவத்தை எட்டும்போது அவரது வாழ்க்கை தவறான திசையில் மாறிவிட்டது. படிப்புக்கு ஸ்காலர்ஷிப் உதவி கிடைத்தாலும், போதைப் பழக்கத்துக்கு அடிமையானதால் அவர் தெருக்களில் வசிக்கும் அளவுக்கு தள்ளப்பட்டுவிட்டார்.
பின்னர் மறுவாழ்வு மையத்துக்கு சென்று ஏழு ஆண்டுகளுக்கு போதை பழக்கம் இல்லாமல் இயல்பாக இருந்துள்ளார் டோம். இவருக்கு முதல் குழந்தை பிறந்தபோது, அவரது தந்தை ஒரு வீட்டை வாங்கி கொடுத்துள்ளார். அந்த வீட்டின் மதிப்பு 5,30,000 பவுண்ட். இந்திய ரூபாய் மதிப்பில் 5 கோடி ரூபாய்க்கு மேல்.
இந்த வீட்டில் இருந்து மாதம் தோறும் சுமார் 1.3 லட்சம் ரூபாய் வருமானம் அவருக்கு வருகிறது. போதைப் பழக்கத்தை விடாததால் டோமை அவரது குடும்பத்தினரும் கைவிட்டுவிட்டனர். லண்டனில் சொந்த வீடு இருந்தாலும், போதை வஸ்துக்களுக்கு அடிமையானதால் இன்னும் தெருக்களில் வசித்து வருகிறார் டோம்.
மேலும் படிக்க...
காய்கறி சாகுபடிக்கு ரூ.80,000 மானியம்- தொடர்பு தொலைபேசி எண்கள் அறிவிப்பு!
Share your comments