கிருஷி ஜாக்ரனின் "Farmer The Journalist" ஆதாவது விவசாயி பத்திரிக்கையாளராக என்ற புது முயற்சியை மேற்கொண்டு வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இம்முயற்சியால், ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள விவசாயிகள், இப்போது பத்திரிகையாளர்களாக மாறி தங்கள் கருத்துகளை உரக்க சொல்ல முடியும். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது விவசாயம் தொடர்பான செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்களை அதிக அளவில் காண முடிந்தது.
இந்த விஷயத்தில் அவர்களுக்கு கூர்மையான திறண் இருப்பது குறிப்பிடதக்கது. இதனால் விவசாயிகளின் உண்மையான பிரச்சனைகள் மற்றும் கவலைகள் கேட்பாரற்று கிடக்கிறது. இந்தச் சூழல்களை எல்லாம் மனதில் வைத்து, நீண்ட வரலாற்றையும், விவசாயப் பத்திரிகையில் ஆழ்ந்த நிபுணத்துவத்தையும் கொண்ட கிருஷி ஜாக்ரனின் தலைமை ஆசிரியர் எம்.சி.டோமினிக், "Farmer The Journalist" நிகழ்ச்சியைத் தொடங்க முன்முயற்சி எடுத்தார். இந்த முயற்சியின் மூலம் திறமையான விவசாயிகளுக்கு பத்திரிக்கையாளர் ஆவதற்கு கிரிஷி ஜாக்ரன் இலவச பயிற்சி அளித்து வருகிறது. இப்போது விவசாயிகள் தங்கள் நடைமுறைகள் மற்றும் கஷ்டங்களை எழுத முடியாவிட்டாலும் மொபைல் போன்ற தொழில்நுட்பம் மூலம் வீடியோக்களை படமாக்க அனுமதிக்கும் என்பதால், அவர்கள் குரல் ஒளிப்பதை காண முடிகிறது.
FTJ முயற்சியில் விவசாயிகள் பத்திரிகையாளர்களாக மாறுவார்கள், அவர்களின் பயிற்சி பெற்ற திறன்களைப் பயன்படுத்தி சட்டப்பூர்வ அரசாங்க அமைப்புகளுக்கும் நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் தங்களது பிரச்சனைகள், தங்களது புதிய முயற்சிகள் என பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள். விவசாயிகளிடையே விவசாய விழிப்புணர்வு நிகழ்ச்சியான FTJ வெற்றியை கண்டுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதில் இந்தியா முழுவதும் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.
நேற்று அதாவது வெள்ளிக்கிழமை, ஜூலை 15, 2022 அன்று, க்ரிஷி ஜாக்ரன் ஒரு நேரடி அமர்வை ஏற்பாடு செய்தது. இத்திட்டத்தின் நோக்கமானது, விவசாயிகளின் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தி, விவசாயத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை விவாதிப்பதன் மூலம் உலகிற்கு ஒரு வாய்ப்பை வழங்குவதாகும். இந்த ஆன்லைன் திட்டத்தில் இந்தியா முழுவதும் இருந்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கிரிஷி ஜாக்ரனின் இந்த திட்டத்தை தொகுப்பாளனி மற்றும் உள்ளடக்க மேலாளர் (ஹிந்தி) ஸ்ருதி ஜோஷி நிகம் தொடங்கி வைத்தார், அவர் பல்வேறு மாநிலங்களில் இருந்து வெபினாரில் கலந்து கொண்ட அனைத்து பேச்சாளர்களையும் வரவேற்றார். திட்டத்தை முன்னெடுத்துச் சென்ற அவர், நம் வாழ்வில் விவசாயம் ஏவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை குறிப்பிட்டார். கொரோனா போன்ற கடினமான காலங்களிலும், விவசாயம் நாட்டின் பொருளாதாரத்திற்கு நிறைய பங்களித்துள்ளது என்று அவர் கூறினார்.
எம்.சி டொமினிக் விவசாயிகள் முன்னேற வழிகாட்டுதல்:
நிகழ்ச்சியில் உரையாற்றிய க்ரிஷி ஜாக்ரனின் தலைமை ஆசிரியர் எம்.சி.டோமினிக், விவசாயிகளுடன் கருத்துக்களைப் பரிமாறி, அவர்களுக்கு வழிகாட்டும் விதமாக பல கருத்துகளை தெரிவித்தார் மற்றும் விவசாயிகளுக்கு அவரது ஆதரவை உறுதி செய்தார்.
தனது உத்வேகத்தையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தி, மேலும் 25 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும், விவசாயத் துறையில் விவசாயிகளுக்கு அதிக லாபம் ஈட்டவும் பணிபுரிய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் கிரிஷி ஜாக்ரனைத் தொடங்கினேன் என்றார் எம்.சி.டாம்னிக். அவரைப் பொறுத்தவரை, விவசாயிகளுக்கு சரியான பயிற்சி அளிக்கப்பட்டால், அவர்கள் தங்கள் பிரச்சினைகளையும் கவலைகளையும் சரியாக முன்வைக்க முடியும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
FTJ இன் உதவியுடன், பயிற்சித் திட்டங்கள் மூலம் விவசாயிகள் இந்தத் திறன்களைப் பெறலாம், மேலும் தங்களை மிகவும் திறமையாக வெளிப்படுத்தலாம்.
இது தவிர, இம்மாதம் 21ஆம் தேதி நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான உலகளாவிய நிகழ்வைப் பற்றியும் எம்.சி.டோமினிக் அனைத்து விவசாயிகளுக்கும் தெரிவித்தார். அனைத்து விவசாயிகளையும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவும், விவசாய சமூகத்தின் உலகளாவிய பார்வையைப் பெறவும் அவர் ஊக்குவித்தார்.
FTJ இன் கீழ் பயிற்சி பெற்ற விவசாயிகளில் அதுல் திரிபாதி, ஹனுமான் படேல், நரேந்திர சிங், நரேந்திர சிங் மெஹ்ரா, மனோஜ் கண்டேல்வால், ராம்சந்திர எஸ் துபே, பங்கஜ் பிஷ்ட், தீபக் பாண்டே, ஷோபாரம், ஷரத் குமார், கௌதம், ராஜ்குமார் படேல் மற்றும் ரங்கநாத் ஆகியோர் பங்கேற்று அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டனர்.
மேலும் படிக்க:
TNPSC 2022 குரூப் 4 ஹால் டிக்கெட் வெளியீடு: இதோ Download Link!
Share your comments