வீட்டிலிருந்தபடியே ஆதாரில், மொபைல் போன் எண்ணை அப்டேட் செய்யும் வசதியை, இந்தியா போஸ்ட் பேமன்ட் பேங்க் (India Post Payment Bank) அறிமுகப்படுத்தியுள்ளது.
வீட்டிலேயே வங்கி சேவை:
இந்திய அஞ்சல் துறையின் அங்கமான, இந்தியா போஸ்டல் பேமன்ட் பேங்க், அனைவருக்கும் வங்கி சேவை சாத்தியமாவதற்காக, வீடு தேடி வரும் வங்கி சேவையை வழங்கி வருகிறது. இதன்மூலம், புதிய கணக்கு துவங்குதல், பண பரிமாற்றம், பணம் எடுத்தல், சேமிப்பு திட்டங்களில் பணம் செலுத்தல் என பல்வேறு சேவைகளை, வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டிலிருந்தே செய்ய முடியும். வங்கிகளுடன் ஒப்பிடும்போது, 'டோர் ஸ்டெப் பேங்கிங்' சேவைகளுக்கு, குறைந்தளவு கட்டணமே வசூலிக்கப்படுகிறது. புதிதாக, இந்தியா போஸ்ட் பேமன்ட் பேங்க், ஆதாரில் மொபைல் போன் எண் 'அப்டேட்' செய்யும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
தபால்காரர்கள்
வங்கி வசதி கிடைக்காத கிராம பகுதி மக்களுக்கு, இச்சேவை மிகவும் உதவியாக இருக்கும் என்று, இந்தியா போஸ்ட் பேமன்ட் பேங்க் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும், 650 இந்தியா போஸ்ட் பேமன்ட் பேங்க் கிளைகள் மற்றும் பயோமெட்ரிக், ஸ்மார்ட்போன் வசதி மூலம் வங்கி சேவைகளை வழங்கி வரும், ஒரு லட்சத்து 46 ஆயிரம் தபால்காரர்கள் வாயிலாக, இந்த சேவை வழங்கப்படவுள்ளது.
மேலும் படிக்க
27 வகை கொரோனாக்களை சமாளிக்கும் திறன் பெற்ற தடுப்பு மருந்து!
ஒலிம்பிக் போட்டி நிகழும் டோக்கியோவில் ஒரே நாளில் 2848 பேர் கொரோனாவால் பாதிப்பு
Share your comments