திருவாரூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த நூற்றாண்டைக் கடந்த அண்ணன், தங்கை இந்தத் தள்ளாத வயதிலும், மனம் தளாராமல் விவாசயத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
வலங்கைமான் தாலுகா தெற்கு பட்டம் ஊராட்சி குப்பனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவருக்கு 110 வயதாகிறது. தினமும் வயலில் கூலி வேலை செய்து வருமானம் ஈட்டி வருகிறார். வயல்களுக்கு முள்வேலி அமைத்தால், நாற்று பறிப்பது போன்றவையே இவரது பணிகள்.
இந்த வயதிலும் கண் பார்வை தெளிவாக உள்ளது. காது சரிவரக் கேட்பதில்லை என்ற போதிலும், இது நாள் வரை மருத்துவமனைக்கு சென்றதில்லை.. ஊசி போட்டதில்ல.. மருந்து, மாத்திரை சாப்பிட்டதில்லை என்கிறார் பெருமையுடன்.
இவரது மனைவி ஆச்சியம்மாள் (85), மகன் சவுந்தரராஜன். இவருக்கு திருமணமாகி விட்டது. மனைவி, மகன், மருமகள், பேரன், பேத்தி ஆகியோருடன் ரங்கசாமி சந்தோஷமாக வாழ்நாளைக் கழித்துவருகிறார்.
இவரது தங்கை ரவுணம்மாளுக்கு 108 வயதாகிறது. கணவர் இறந்து விட்டதால் ரங்கசாமியுடன் வசிக்கிறார். 10 ஆடுகளை வாங்கி மேய்த்து வருகிறார். விவசாய வேலைகளையும் கவனிக்கிறார்.
வயலில் கடினமாக உழைத்ததன் பயனாகவே, வாழ்நாளில் இதுவரை மருத்துவமனை வாசலை மிதிக்காததற்கு என்று பெருமையுடன் கூறுகிறார்கள் இருவரும்.
விவசாயமே அதிசயம் என்றதால், அதனைச் செய்யும் இவர்கள் 21ம் நூற்றாண்டின் அதிசயம்தான்.
மேலும் படிக்க...
கூடுதல் மகசூலுக்கு பறவைகளும் முக்கியமே !
பயிருக்கு உயிரூட்டும் தயிர்- பொன்னியமாக மாற்றி யூரியாவிற்கு பதிலாக பயன்படுத்தலாம்!
Share your comments