1. Blogs

வேளாண் மாணவிகள் பஞ்சகவ்யா, சிறுதானிய ஆண்டு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

Deiva Bindhiya
Deiva Bindhiya
வேளாண் மாணவிகள் பஞ்சகவ்யா, சிறுதானிய ஆண்டு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
Agriculture college students awareness about panchagavya, small millet year

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டாரம் பெரிய குளம் கிராமத்தில், பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களால் உருவாக்கப்படும் ஒரு உயிரி நீர்மக்கலவை பஞ்சகவ்வியம் பற்றி பிஜிபி வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு விளக்கினார்.

ஐந்து விரல் மந்திரம்; அது, பஞ்சகவ்யாவின் தந்திரம்

  • பஞ்சகவ்யாவில் அனைத்து பேரூட்டச் சத்துக்களும், நுண்ணுயிர் சத்துக்களும், பயிர் வளர்ச்சி ஊக்கிகளும், மிகுந்த அளவில் உள்ளன. 75% உரமாகவும் 25% பூச்சி மற்றும் நோய்க்கொல்லி மருந்தாகவும், வேலை செய்கிறது.
  • பசுஞ்சாணம் 5 கிலோவுடன் பசுமாட்டு நெய் 1லிட்டர் கலந்து பிசைந்து 3 நாட்கள் வைத்து தினமும் ஒரு முறை பிசைந்துவிட வேண்டும்.
  • 4வது நாள் கோமியம், பசும்பால், தயிர், நெய், இளநீர் மற்றும் வாழைப்பழம்சேர்த்து நன்கு கரைத்து பயன்படுத்த வேண்டும்.
  • செடிகளின் இலைகள், வேர், மண் என அனைத்து பகுதிகளிலும் இதனைதெளிக்கலாம்.
  • மண்ணிற்கு மட்டுமல்ல செடிகளின் செழுமைக்கும் இந்த பஞ்சகவ்யம் உறுதுணையாக இருக்கும்.

அடுத்ததாக, பிஜிபி வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் டிரைக்கோடெர்மா விரிடி பற்றி செயல் விளக்கம்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் ஆர்.பி.புதூர் கிராமத்தில் பிஜிபி வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் டிரைக்கோடெர்மா விரிடி பற்றி விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர். இதில் பலாப்பழத்திற்கு மண் அள்ளும் முறையில் செய்திருக்கிறார்கள். டிரைக்கோடெர்மா விரிடி எதிர் உயிர் பூஞ்சாணம் எனப்படும். இது வேர்களில் வளர்ந்து மற்ற பூஞ்சாணங்களை வளராமல் தடுத்துவிடும்.
எல்லாப் பயிர்களில் உண்டாகும் வேரழுகல், நாற்றழுகல் மற்றும் வாடல் நோய்களை கட்டுப்படுத்தும். இதுதவிரப் பயிர்களுக்குத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.

மேலும் படிக்க: PM Kisan : 13வது தவணை நிலை விவரங்களை இவ்வாறு சரிபார்க்கலாம்!

  • மண்ணில் உள்ள மக்காத குப்பைகளை எளிதாக, விரைவாக மக்க வைத்து உரமாக்க மாற்றுவதில் டிரைக்கோடெர்மா விரிடி முக்கியப் பங்கு வகிக்கிறது.
  • டிரைக்கோடெர்மா விரிடியை அடியுரமாகவும் போடலாம். விதைநேர்த்தி செய்யவும் பயன்படுத்தலாம்.
    அதேநேரத்தில், தண்ணீரில் கலந்தும் ஊற்றலாம்.
  • ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடெர்மா விரிடியை 10 கிராம், நீர் தெளித்து கலந்து அரைமணிநேரம் நிழலில் உளர்த்தி பிறகு நடவு செய்யலாம்.
  • டிரைக்கோடெர்மா விரிடி ஒரு ஏக்கருக்கு 2 முதல் 3 கிலோவை மண்புழு உரம் அல்லது இயற்கை உரம் 100 கிலோவுடன் கலந்து 10- 15 நாட்கள் நிழலில் வைத்துப் பிறகு நிழத்தில் ஈரம் இருக்கும் பொழுது அடியுரமாக போடலாம்.
  • டிரைக்கோடெர்மா விரிடி ஒரு கிலோவை 100 லிட்டர் நீரில் கரைத்து வேர்பகுதியில் ஊற்றலாம்.
    இது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்பது குறிப்பிடதக்கது.

3G 4G என்று போகும் காலத்தில் 3ஜி இல் கரைசலா பிஜிபி வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டாரம் பெரிய குளம் கிராமத்தில் பிஜிபி வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் இயற்கை விவசாயத்தில் ஒரு முக்கிய பூச்சி விரட்டியாக செயல்படும் தன்மை கொண்ட இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் பற்றி விவசாயிகளுக்கு எளிய முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை குறைந்த செலவில் தயாரித்து பயிர்களுக்கு தெளிப்பதால் பூச்சி, நோய் தாக்கத்திலிருந்து பயிரை பாதுகாக்கலாம். இயற்கை விவசாயம் செய்பவர்கள் மற்றும் மாடித் தோட்டம், வீட்டு தோட்டம் செய்பவர்கள் பயன்படுத்த சிறந்த பலனளிக்கும். 18 கிராம் பூண்டு, 9 கிராம் இஞ்சி மற்றும் 9 கிராம் பச்சை மிளகாய் சாறு 1 லிட்டர் தண்ணீரில் கலந்து பயன்படுத்தப்படுகிறது.

தண்டுத் துளைப்பான் பழத்துளைப்பான்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இது எளிய முறை என்பதனால் மக்களும் ஆர்வம் காட்டினர்.

2023ஐ சர்வதேச சிறுதானிய ஆண்டு- பிஜிபி வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் முத்துகாப்பட்டி கிராமத்தில் பிஜிபி வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் சர்வதேச தினை ஆண்டின் முக்கியவத்தை பற்றி மக்களுக்கு ஏடுத்துரைத்தனர். மேலும், மக்களுக்கு சிறுதானியங்கள் வகையால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள், பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப பயிரிடும் முறைகள் போன்றவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

ஐ.நாவின் நோக்கங்களான உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தில் சிறுதானியங்களின் பங்களிப்பு பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துதல் மற்றும் கம்புகளின் நிலையான உற்பத்தி மற்றும் தரத்தை மேம்படுத்துவதில் பங்குதாரர்களை ஊக்குவிக்கவும்.

மற்ற இரண்டு நோக்கங்களை அடைய ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் விரிவாக்க சேவைகளில் மேம்பட்ட உள்ளனர் என்பதை மக்களுக்கு ஏடுத்துரைத்தனர்.

மேலும், கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து மக்களின் உணவுமுறையில் ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் நிறைந்த உணவுகள் இடம்பெற வேண்டும் என்று ஏடுத்துரைத்தனர். இந்நிலையில், நம் நிலத்தின் பயிர்களான சிறுதானிய வகைகளில் கவனம் செலுத்துவதன் மூலம், உடல் ஆரோக்கியம் மட்டுமன்றி விவசாய நிலங்களின் சூழலியல் சமநிலையையும் பாதுகாக்க முடியும் என்றும் அவர்கள் எடுத்துரைத்தனர்.

மேலும் இப்போது பெருகிக்கொண்டிருக்கும் சிறுதானிய உணவுப் பொருட்களின் தேவையை உணர்ந்து, இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இன்னும் அதிக விவசாயிகளைச் சிறுதானிய உற்பத்தியில் ஈடுபட வைக்க முடியும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். இந்த தகவல் மக்களிடையே வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க:

கரும்புக்கான பரிந்துரை விலை டன்னுக்கு ரூ.4,000 வழங்க கோரி விவசாயிகள் முற்றுகை

PM கிசான் 13வது தவணை நிலை அறிய வேண்டுமா?| விதைப்பண்ணை அமைக்க மானியம்| TNAU 2 நாள் பயிற்சி

English Summary: Agriculture college students awareness about panchagavya, small millet year Published on: 20 February 2023, 05:21 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.