1. Blogs

புதுசா முதலீடு செய்பவரா நீங்கள்? எதுல முதலீடு பண்ணா அதிக லாபம் வரும்!

R. Balakrishnan
R. Balakrishnan
New Investors

புதிதாக வரும் முதலீட்டாளர்கள் ட்ரெண்டிங் ஃபண்ட் அல்லது நீண்டகால ஃபண்டில் (Long term fund) முதலீடு செய்வதிலே தங்களின் கவனத்தை செலுத்துவார்கள். ஆனால் அதிலும் குறிப்பாக ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்வதிலே அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

புதிய முதலீட்டாளர்கள் (New Investors)

புதிய முதலீட்டாளர்கள் குழப்பத்திற்கு ஆளாவது அதில் எங்கு முதலீடு செய்வது என்பதில்தான். SIP அல்லது லம்ப்சம்மில் (lumpsum) முதலீடு செய்வதா அல்லது பேசிவ் (passive) (அ) ஆக்டிவ் (active fund) ஃபண்டில் முதலீடு செய்யலாமா எனக் குழம்பி விடுவார்கள். அது குறித்து சில ஆய்வுகளை இங்கு காணலாம். அதில் சிப் மற்றும் லம்ப்சம் இரண்டிற்கும் உள்ள வித்யாசங்கள் மற்றும் லாப விகிதங்களை காணலாம்.

  1. ஆக்சிஸ் ப்ளூசிப் ஃபண்ட் – SIP – 2012 முதல் 2022 வரை அதன் லாபமானது சிப் முதலீட்டில் 14.3% ஆகவும் மொத்த முதலீட்டில் (Lumpsum) 14.6% ஆகவும் உள்ளது.
  2. ஐசிஐசிஐ ப்ருடெண்ஷியல் ப்ளூசிப் ஃபண்ட் – 2012 முதல் 2022 வரை அதன் லாபமானது SIP முதலீட்டில் 14.5% ஆகவும் மொத்த முதலீட்டுல் (Lumpsum) 14.4% ஆகவும் உள்ளது.
  3. கோடாக் ஃப்ளெக்சி கேப் ஃபண்ட் - 2012 முதல் 2022 வரை அதன் லாபமானது SIP முதலீட்டில் 15.1% ஆகவும் மொத்த முதலீட்டில் (Lumpsum) 15.8% உள்ளது.

இந்த ஃபண்டுகள் கடந்த 10 ஆண்டுகளில் நீண்ட கால முதலீட்டில் அதிக லாபத்தை அதன் முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளன.

Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.

மேலும் படிக்க

1000 ரூபாய் போதும்: கல்லூரி மாணவர்களும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்!

ஆதார் கார்டு இருந்தா இது ஈசி தான்: ஆதார் அமைப்பின் முக்கிய அறிவிப்பு!

English Summary: Are you a new investor? Which investment will be more profitable! Published on: 28 October 2022, 07:55 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.