1. Blogs

EPFO பயனாளரா நீங்கள்? ரூ. 5 லட்சம் வரை முக்கிய பலன்கள் உங்களுக்கு தான்!

R. Balakrishnan
R. Balakrishnan
EPFO Benefits

மத்திய அரசு ஊழியர் வருங்கால வைப்பு நிதி பயனர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய திட்டம் ஒன்றை அறிவிக்க உள்ளது. இதனால் EPFO பயனர்கள் அனைவரும் கிட்டத்தட்ட 5 லட்சம் ரூபாய் வரையிலான பலன்களை அனுபவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

EPFO பயனர்கள் (EPFO Users)

மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களது அரசின் நிதி ஒதுக்கீட்டின் படி மக்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டங்களை வழங்கி வருகிறது. இதனால் சாதாரண மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு சிறந்த மருத்துவ வசதிகளை பெறுகின்றனர். அரசு ஊழியர்களின் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் ஆண்டுக்கு குறிப்பிட்ட அளவு ரூபாய் மதிப்பிலான சிகிச்சைகளை இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதிக்கிறது. இதனால் மக்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர்.

இதேபோல், தற்போது மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் எனப்படும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தினை ஊழியர் வருங்கால வைப்பு நிதி பயனர்களும் அனுபவிக்க முடியும். சாலையோர வியாபாரிகள், சுமை தூக்குவோர், கூலி தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் உட்பட 11 வகையான தொழில் பிரிவில் உள்ளவர்கள் இந்த திட்டத்தின் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையிலும் ஆண்டுக்கு ரூபாய் 5 லட்சம் வரை சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான ஒப்புதலை மத்திய அரசு இந்த மாத இறுதிக்குள் அளிக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பயனடையும் வகையில் ரூ. 7 லட்சம் வரை நிதி உதவி பெற முடியும். பதிவு செய்யப்பட்ட பணியாளர் பணி சமயத்தில் உயிரிழக்கும் பட்சத்தில் இந்த தொகையை பெற்றுக் கொள்ள முடியும். இதோடு மருத்துவ காப்பீட்டிலும் EPFO பயனர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் ரூ.5 லட்சம் வரை திடீர் நோய்கள் மட்டுமின்றி நாள்பட்ட நோய்களுக்கான சிகிச்சைக்கு பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளது.

மேலும் படிக்க

முடிவுக்கு வரும் 2 திட்டங்கள்: மூத்த குடிமக்கள் அதிர்ச்சி!

500 ரூபாய் இருந்தால் போதும்: பென்சன் பற்றிய கவலையே வேண்டாம்!

English Summary: Are you an EPFO ​​user? Upto Rs. 5 Lakhs Benefits Are Yours! Published on: 24 September 2022, 10:56 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.