சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 3-வது சிங்கத்தின் உடல்நிலையில் மோசமானது. இதையடுத்து மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிப்பு
கொரோனா வைரஸ்ஸின் கோராத்தாண்டவம் இந்தியாவின் பல நாடுகளைப் பதம் பார்த்த வருகிறது. இந்த வைரஸ் தொற்றுக்கு பாதிகப்படுவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
பல விலங்குகள் (Many animals)
தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான உயிரியல் பூங்காவாக வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளது.இங்கு மான், குரங்கு, சிங்கம், புலி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
கால வரையறையின்றி மூடல் (Closing indefinitely)
கொரோனா 2ஆம் அலை காரணமாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கால வரையறையின்றி மூடப்பட்டது. இதற்கிடையில், பூங்கா ஊழியர்கள் மட்டுமே உள்ளே சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
உயிரியல் பூங்கா (Zoo)
இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டுவரும் சிங்கங்களில், நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் திடீரென உயிரிழந்துள்ளது. மருத்துவ ஆய்வுகளில் அது, சளி மற்றும் பசியின்மையால் பாதிக்கப்பட்டிருந்ததும், கொரோனா வைரஸ் தொற்று இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9 சிங்கங்களை தனிமைப்படுத்தி கால்நடை மருத்துவ குழுவினர் தலைமையில் பூங்கா மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள்.
உடல்நிலை மோசமடைந்தது (Health deteriorated)
தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கவிதா, புவனா ஆகிய 2 பெண் சிங்கங்களின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. இந்த 2 சிங்கங்களையும் காப்பாற்றும் முயற்சியில் மருத்துவ குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
மருத்துவர்கள் கண்காணிப்பில் (Under the supervision of doctors)
இதற்கிடையே தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு சிங்கத்தின் உடல்நிலையும் மோசமானதாகத் தெரிகிறது. அதனை மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
கவிதா என்ற வயதான சிங்கத்தைத் தவிர மற்ற சிங்கங்கள் வழக்கமான உணவைச் சாப்பிடுவதாக வண்டலூர் பூங்கா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆய்வுக்கு அனுப்பிவைப்பு (Dispatch for inspection)
அதே நேரத்தில் பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதா? என்றும் அவர்கள் கண்காணித்து வருகின்றனர். சிறுத்தை, புலி உள்ளிட்ட விலங்குகளின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளன.
மேலும் படிக்க...
சில மாதங்களுக்கு இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கும்! சீரம் அதிகாரி அதிர்ச்சி தகவல்!
கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க 8 பள்ளிகள் ஒப்படைப்பு- ஈஷா நடவடிக்கை!
Share your comments