பென்சன் வாங்குவோருக்கு ஏதுவாக ஆயுள் சான்றிதழை ஆன்லைன் மூலமாகவே சமர்பிக்கும் வசதியை அரசு ஏற்படுத்தியுள்ளது. அதனை அடுத்த ஆண்டு பிப்ரவரி 28 வரை சமர்பித்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. ஓய்வூதியதாரர்கள் மின்னணு வாயிலாக டிஜிட்டல் லைஃப் சர்டிபிகேட் (Digital Life certificate) சமர்பிப்பதற்கு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பல்வேறு வழிமுறைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. கொரோனா காலத்தில் ஒய்வூதியம் (Pension) பெறுபவர்களுக்கு ஏதுவாக, மத்திய அரசானது ஆயுள் சான்றிதழை ஆன்லைன் மூலமாகவே சமர்ப்பிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் சான்றிதழை பெறும் வழிமுறை:
மத்திய அரசின் அனைத்து ஓய்வூதியதாரர்களும், நவம்பர் 1ம் தேதி, 2020 முதல் 2020 டிசம்பர் 31ம் தேதி வரையில் தங்களது ஆயுள் சான்றிதழை தாக்கல் செய்யலாம் என முன்னதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது அதனை பிப்ரவரி 28 வரை நீட்டித்துள்ளது. ஆயுள் சான்றிதழை (Life Certificate) பெற டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்து கொள்ளலாம். இவ்வாறு டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்றிதழை பெறுவதற்கு, விண்ணப்பதாரரிடம் ஆதார் எண் (Aadhar Card), மொபைல் எண் இருக்க வேண்டும்.
ஜீவன் பிரமான் செயலி:
டிஜிடல் முறையில் ஜீவன் பிரமான் செயலியை (Jeevan Pramaan) பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில் புதிய பதிவு (new registration) என்பதனை கிளிக் செய்து, ஆதார் எண், உங்கள் வங்கிக் கணக்கு எண், பெயர், மொபைல் எண், பென்சன் பேமெண்ட் ஆர்டர் (PPO) ஆகிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின்னர், உங்களது பதிவு எண்ணுக்கு ஒடிபி (OTP) வரும், அதனை பதிவிட்டு சமர்ப்பிக்க வேண்டும். இதனையடுத்து ஜீவன் பிரமான் செயலியில் ஓடிபி எண் மூலம் லாக் இன் செய்ய வேண்டும். Generate Jeevan Pramaan என்பதைத் தேர்ந்தெடுத்து ஆதார் எண், மொபைல் எண் ஆகிய விவரங்களைப் பதிவிடவும். அதன் பின் generate OTP என்பதை கிளிக் செய்தால், உங்களது மொபைல் எண்ணுக்கு ஓடிபி எண் வரும்.
கொடுக்க வேண்டிய விவரங்கள்
PO எண், பெயர், பென்சன் கொடுக்கும் நிறுவனத்தின் பெயர் போன்ற விவரங்களைப் பதிவிட வேண்டியிருக்கும். அதன் பின்னர் ஆதார் விவரங்களை வைத்து கை ரேகையை ஸ்கேன் (Scan) செய்தால், ஜீவன் பிரமான் பத்திரம் திரையில் தோன்றும். உங்களது லைஃப் சர்டிபிகேட் கிடைப்பது குறித்த உறுதிப்படுத்தும் செய்தி, உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு SMS ஆக வரும். ஆயுள் சான்றிதழை வீட்டில் இருந்தே சமர்பிக்கலாம் ஆக ஓய்வூதியம் வாங்குவோர் தங்களது லைஃப் சர்டிபிகேட்டினை வீட்டில் இருந்த படியே சமர்ப்பிக்கலாம். அஞ்சல் அலுவலகம் மூலமாகவும் இந்த சேவை வழங்கப்படுகிறது. இதில் தபால் காரர்கள் வீடு தேடி வந்து ஆயுள் சான்றிதழை வாங்கி கொள்வார்கள். இதற்கு 70 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
ஆக இதன் மூலம் ஓய்வூதியதாரர்கள் வங்கிக் கிளைகளில் நாள் கணக்கில் காத்துக் கிடக்க வேண்டிய நிலை இனி இல்லை. இருந்த இடத்தில் இருந்த படியே லைஃப் சர்டிபிகேட்டினை சமர்ப்பிக்கலாம்.
KRISHI JAGRAN
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
EPF இருக்கா? அப்போ இலவச காப்பீடு உங்களுக்குத் தான்!
Share your comments