2022-23ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு மாநில பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. இதில் அரசு பணியாளர்கள் நலன் குறித்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.
ஓய்வூதியதாரர்கள் (Pensioners)
தமிழ்நாடு அரசின் ஓய்வூதியதாரர்கள் குடும்பப் பாதுகாப்பு நிதித் திட்டத்தில் ஓய்வூதியதாரர்களின் மரணத்தின்போது அவர்களின் குடும்பத்திற்கு 50,000 ரூபாய் வழங்கப்படுகிறது. கோவிட் பெருந்தொற்றால் இத்தொகையை பெறுவதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஓய்வூதியதாரர்களின் குடும்பத்தினரின் நலனை கருத்தில் கொண்டு, நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை நேர் செய்ய ஒரு சிறப்பு ஒதுக்கீடாக 50 கோடி ரூபாய் அரசு வழங்கும்.
19000 கோடி ரூபாய் ஒதுக்கீடு (19000 Crores Allocation)
கோவிட் பெருந்தொற்றால் பணியிடை மரணமடைந்த 327 முன்களப் பணியாளர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 79.5 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.
உயர்த்தப்பட்ட அகவிலைப்படி தொகையை அரசு ஊழியர்களுக்கு வழங்குவதற்காகவும், ஓய்வூதியப் பயன்களை வழங்குவதற்காகவும் பட்ஜெட்டில் ஏறத்தாழ 19000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
தமிழக பட்ஜெட் 2022: முக்கிய அம்சங்கள்!
தமிழக பட்ஜெட்: உயர்கல்வி பயில அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000!
Share your comments