வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கு இனி பான் கார்டுகள் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல பணம் எடுக்கும் போது வசூலிக்கப்படும் வரியில் இருந்தும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
பான் கார்டு (Pan Card)
மத்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள ஆவணமான ஆதார் கார்டுகளை போல, பான் கார்டுகளும் தற்போது பல வகையான சேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில், PF சந்தாதாரர்கள் தங்களது கணக்குகளில் இருந்து பணம் எடுப்பதற்கு இனி பான் கார்டுகள் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வரி விதிமுறைகளை மத்திய அரசாங்கம் திருத்தியுள்ளது. அதன்படி, பான் கார்டுடன் இணைக்கப்பட்ட கணக்குகளுக்கு TDS வரி விதிக்கப்படாது.
அதே நேரத்தில், PF கணக்குடன் பான் கார்டுகளை இணைக்காத போது, பணம் எடுக்கையில் விதிக்கப்படும் TDS வரிகளில் 10 சதவீத குறைப்பு இருக்கும் என்று மத்திய பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக பான் கார்டு இணைக்காத கணக்குகளுக்கு 30% TDS வரி விதிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய விதிமுறைகள் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
மேலும் படிக்க
LIC பாலிசி தகவல்களை வாட்ஸ் அப் மூலம் அறியும் புதிய வசதி: வழிமுறை இதோ!
Share your comments