அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வழங்கப்படும் வருங்கால வைப்பு நிதி PF கணக்கு வைத்திருக்கும் ஊழியர்களுக்கு புதிய வழிமுறைகள் வெளியாகி இருக்கிறது. அதன் படி பிஎஃப் கணக்கில் நாமினி பெயரை இணைப்பது அவசியம் ஆகும். அதற்கான கடைசி தேதி மார்ச் 31 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
PF முக்கிய அறிவிப்பு (PF Important Announcement)
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மூலமாக அனைத்து அரசு மற்றும் சில அமைப்பு சார்ந்த தனியார் நிறுவங்களில் பணிபுரிவோருக்கு எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும் வகையில் அவர்களது மாத சம்பளத்தில் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு சேமிக்கப்படும். பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் வருமான வரியின் பிரிவு 80 சி இன் கீழ் தங்கள் சம்பளத்தில் 12% வரிகளை சேமிக்க முடியும். இபிஎப்ஓ சட்டத்தின்படி 12 சதவீதம் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதில் 8.33% ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்திற்கும் செல்கிறது.
அதனால் அதிக வட்டி கிடைப்பதோடு, பென்சன், இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் இதன் மூலம் கிடைக்கின்றது. பலர் பிஎஃப் கணக்கில் சேமிப்பவராக இருக்கின்றனர். இந்நிலையில் பிஎஃப் விதிமுறைகளில் மிக முக்கியமான மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் படி பிஎஃப் கணக்கில் நாமினி பெயரைச் சேர்ப்பது கட்டமாக்கப்பட்டுள்ளது. அப்படி இணைத்தால் மட்டுமே பிஎஃப் உறுப்பினருக்கு ஒருவேளை ஏதேனும் நேர்ந்துவிட்டால் அவரது பிஎஃப் பலன்கள் அந்த நாமினிக்கு கிடைக்கும்.
நாமினி நியமனம் (Nominee Appointment)
அப்படி இணைக்காமல் இருந்தால் பிஎஃப் உறுப்பினர் இறந்த பின் காப்பீடு கிடைக்காமல் போய்விடும். பிஎஃப் உறுப்பினர்களுக்கு தொழிலாளர் டெபாசிட் இணைப்பு காப்பீட்டு திட்டத்தின் (EDLI) கீழ் அதிகபட்சமாக ரூ.7 லட்சம் வரை காப்பீடு கிடைக்கிறது. அப்படி நாமினி இணைக்காமல் இருந்தால் ரூ.7 லட்சம் வரையிலான காப்பீடு கிடைக்காது. அதேபோல, பிஎஃப் கணக்கில் உள்ள பேலன்ஸ் எவ்வளவு என்று பார்ப்பதற்கும் நாமினி பெயரை இணைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பேலன்ஸ் பார்க்க முடியாது. நாமினியை இணைக்க மார்ச் 31 கடைசி தேதி ஆகும். ஆன்லைன் மூலமாக நாமினியை இணைக்க https://www.epfindia.gov.in என்றஇணையதளத்தை கிளிக் செய்து விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
மேலும் படிக்க
LIC பாலிசிதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: மார்ச் 25 வரை கால அவகாசம்!
பென்சன் வாங்குவோர் கவனத்திற்கு: தமிழக அரசின் அருமையான அறிவிப்பு!
Share your comments