ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), உறுப்பினர்கள் நலன் கருதி பல்வேறு வகையான திட்டங்களை, பலன்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. அதில், முக்கியமாக ரூ. 7 லட்சம் வரையிலான பலன்களை அடைவதற்கு செய்ய வேண்டிய முக்கிய பணிகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
நாமினி (Nominee)
பணியாளர்கள் வாங்கும் மாதச்சம்பளத்தில் 12 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு பணியாற்றும் நிறுவனம், அதற்கு சமமான தொகையையும் சேர்த்து வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் முதலீடு செய்யும். இது ஊழியர்களின் PF அக்கவுண்ட்டில் சேர்க்கப்படும். இந்த தொகையை ஊழியர்கள் தங்கள் பணி ஓய்வு நிலையில், அல்லது அதற்கு முன்னதாக கூட தேவைப்படும் போது எடுத்துக் கொள்ளலாம். நாமினி தேர்வானது கட்டாயமான செயலாகவும் உள்ளது.
உறுப்பினர்களின் மறைவிற்கு பிறகு நாமினிகள் இருந்தால் மட்டுமே பென்சன் உள்ளிட்ட பயன்கள் கிடைக்கும், மேலும், PF தொகை கிடைக்கும். இதனால் நாமினி பதிவு செய்வதை இந்த அமைப்பு கட்டாயமாகியுள்ளது. இதற்கான அவகாசத்தையும் அளித்துள்ளது. கணக்கில் தாக்கல் செய்துள்ள நாமினியை மாற்றம் செய்யவும், புதியவரை நியமனம் செய்யவும் வழிகள் உள்ளது. இதனை ஆன்லைனிலேயே செய்து கொள்ளலாம்.
EDLI திட்டம் (EDLI Scheme)
பிஎஃப் உறுப்பினர்கள் EDLI திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் வரையில் பயன்பெற முடியும். இந்தக் காப்பீட்டுத் தொகை அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். நாமினிகளை பதிவு செய்யாத பட்சத்தில் இந்த பலன்கள் கிடைக்காது. உறுப்பினர்களின் பிஎஃப் நம்பர், கணக்கு எண், பான் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட எந்தவொரு ஆவணத்தையும் பிஎஃப் அமைப்பு போன் கால் வாயிலாகவோ வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாகவோ கேட்காது. இதனால் இதனை யாரிடமும் தெரிவிக்காமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
மேலும் படிக்க
PF புதிய விதிமுறைகள்: ஏப்ரல் மாதம் முதல் அமல்!
வைப்பு நிதி வட்டியில் மாற்றம்: சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதல் வருமானம்!
Share your comments