1. Blogs

12 நாடுகளுக்குப் பறக்கும் வாழை நார் கூடைகள்- புதுக்கோட்டையில் தயாராகின்றன!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Banana fiber baskets flying to 12 countries - ready in Pudukkottai!
Credit : Maalaimalar

புதுக்கோட்டை மாவட்டத்தில் தயாராகும் வாழை நார் கூடைகள் பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கொரோனாவால் பாதிப்பு (Damage by corona)

கொரோனாவின் அடுத்தடுத்த அலைகள் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் வாழ்க்கையை நிலைகுலைய வைத்துள்ளது. இதன் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த பலர் கடன் சுமைக்கு ஆளாகி தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ளும் நிலைக்கும் தள்ளப்பட்டனர்.

மீட்டெடுக்கும் முயற்சி (Attempt to recover)

ஆனால் இதுபோன்ற முடிவுக்குப் போகக்கூடாது என்று அறிவுறுத்தி வரும் அரசு, மனநல ஆலோசனைகள் வழங்கி அவர்களின் வாழ்வை மீட்டெடுக்கும் முயற்சியையும் மேற்கொண்டு வருகிறது.

நெருக்கடி (Crisis)

இதற்கிடையே நிதி நிறுவனம் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் கடன் பெற்ற பலர் தவணைத் தொகையைத் திருப்பி செலுத்த முடியாமல் அவமானங்களைச் சந்தித்து வருகிறார்கள்.

மத்திய அரசு முயற்சி (Federal government effort)

அவர்களுக்கு உரிய பயிற்சியுடன் கூடிய தொழிலைக் கற்றுக்கொடுத்து, நிரந்தர வருவாயை ஈட்டித்தரும் பணியில் மாநில அரசு செயல்படுகிறது.

வாழை நாரில் கூடை (Basket of banana fiber)

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடனில் தத்தளிக்கும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வாழை நாரில் இருந்து கூடை தயாரிக்கும் தொழிலைக் கற்றுக்கொடுத்து நிரந்தர வருவாயை ஏற்படுத்தி தந்திருக்கிறது.

இது குறித்து மாநில அளவிலான ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை பயிற்சியாளர் ரவிச்சந்திரன் கூறுகையில்:-

கடன் உதவி (Credit assistance)

புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் தொண்டு நிறுவனங்களில் 1,560 மகளிர் சுய உதவி குழுக்கள் சுமார் 35,000 உறுப்பினர்கள் இருந்தனர். அவர்களுக்கு குழுவை வழி நடத்துவது, வழிகாட்டுவது, கடன் உதவி போன்ற உதவிகள் செய்து வந்தோம். ஆனால் அவர்கள் கடன் வாங்கும்போது இருக்கும் ஆர்வம் திருப்பி செலுத்தும்போது இருப்பதில்லை. காரணம் வாங்கிய கடனை ஏதாவது ஒரு வகையில் செலவு செய்து விடுகின்றனர்.

சுயதொழில் (Self-employment)

இந்த நிலையில் மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு கடன் வாங்கி கொடுப்பதை விட அவர்கள் சுயதொழில் செய்து முன்னேறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என திட்டமிட்டோம்.
அதன்படி வாழை நார் மூலம் கூடை தயாரித்து அதை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான ஆர்டர் கிடைத்தது. அதற்கு முதலில் பெங்களூரில் உள்ள நிறுவனத்தில் 2015ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தோம்.

சொந்த ஊரிலேயே வேலை (Work in hometown)

  • இதைத்தொடர்ந்து மகளிருக்கு தினமும் ரூ.200 முதல் 350 வரை ஊதியம் கிடைக்கும் வகையில் அவர்கள் சொந்த ஊரிலேயே வேலையை செய்து வருமானம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

  • இதன் மூலம் கொரோனாப் பேரிடர் காலத்தில் பணி பாதுகாப்பும் சுகாதார பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • இந்த தொழில் செய்யும்போது சுயதொழில் என்றால் என்ன? அதில் என்ன வருமானம் கிடைக்கும் என்பதை அவர்களது உறவினர்களும் அறிந்து கொள்ள முடிந்தது.

சொந்தக்காலில் நிற்க (Stand on your own feet)

இதனால் சுயஉதவிக்குழு பெண்களின் கணவர்களும் இந்த தொழிலை கற்றுக்கொண்டு வேலை செய்து குடும்ப வருமானத்தை ஈட்டுகின்றனர். அத்துடன் இந்த குழுவினர் கடனில் சிக்கித் தவிக்காமல் சொந்தக்காலில் நிற்கக்கூடிய சூழலும் ஏற்பட்டுள்ளது.

12 நாடுகளுக்கு (To 12 countries)

வடகாடு, ஆதனக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இவர்கள் தயாரிக்கும் கூடைகள் கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது 27 செ.மீ. அகலமும், 19 செ.மீ. உயரமும் கொண்ட கூடையைத் தயாரித்து வருகின்றனர். இந்த கூடைகள் முடைவதற்கான நார்ப் பொருள்கள் திருநெல்வேலி மற்றும் சோழவந்தான் ஆகிய பகுதிகளில் வாங்கப்படுகிறது.

3 நாள் பயிற்சி (3 day training)

பெண்களுக்கு இரண்டு முதல் மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கிறோம். அதைத் தொடர்ந்து அவர்கள் 200 ரூபாய் சம்பாதிக்கும் தகுதியைப் பெற்று விடுகின்றனர்.
டிரீஸ் தொண்டு நிறுவனத்தின் மூலம் கூடை பின்னும் பெண்களுக்கு வாரம் ஒரு முறை ஊதியம் வழங்கப்படுகிறது. பெண்கள் சுயதொழில் மூலம் வருமானம் பெற்று சொந்தக்காலில் நிற்கும் தன்னம்பிக்கையை நாங்கள் வளர்த்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

கொரோனாவை கட்டுப்படுத்த செப்டம்பர் மாதத்திற்குள் 10% மக்களுக்கு தடுப்பூசி: உலக சுகாதார அமைப்பு!

2020 ஆம் ஆண்டில் 4-இல் ஒருவருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை: யுனிசெப் தகவல்

English Summary: Banana fiber baskets flying to 12 countries - ready in Pudukkottai! Published on: 07 July 2021, 07:29 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.