கொரோனா நெருக்கடியால், நடுத்தரக் குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கி ஊழியர்களின் கவனக்குறைவு காரணமாக, பீகாரைச் சேர்ந்த மக்கள் சிலர், கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர்.
பணப்பரிமாற்றம் (Money transfer)
கடந்த சில நாட்களாக பீகாரைச் சேர்ந்தவர்களின் வங்கிக்கணக்கில் லட்சம் மற்றும் கோடிகளில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதுத் தொடர்பான செய்திகள் வெளியாகி வருகின்றன.
ரூ.900 கோடி வரவு (Rs.900 crore credit)
பீகாரின் கதிஹார் மாவட்டத்தில் பள்ளி கல்வி பயிலும் மாணவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.900 கோடி வரவு வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.இந்த செய்திகள் பீகார் மாநில மக்களை ஆச்சரியம் கலந்த சந்தோசத்தில் திளைக்க வைத்துள்ளது.
ரூ.1.16 லட்சம் வரவு (Rs.1.16 lakh credit)
முன்னதாகக் கடந்த வாரத்தில் மாநிலத்தின் ககாரியா பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வங்கிக்கணக்கில் ரூ.1.16 லட்சம் வரவு வைக்கப்பட்டது. இதனைக் கண்டுபிடித்த வங்கி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு பணத்தை திருப்பித் தர கோரினர்.
ரூ.52 கோடி வரவு (Rs 52 crore credit)
ஆனால் அந்த நபரோ பிரதமர் தருவதாகக் கூறிய தொகையின் ஒரு பகுதி தான் இது எனவும், அதனைத் திருப்பி தர முடியாது எனவும் தெரிவித்து உள்ளார்.
இதேபோல், முசார்பூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ராம் பகதூர் ஷா வின் வங்கிக்கணக்கில் ரூ.52 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதனை முதலில் நம்ப மறுத்த அவர், பின்னர், தனது ஆதார் அட்டையை எடுத்துக் கொண்டு வங்கிக்குச் சென்று தனது வங்கிக்கணக்கைச் சரி பார்த்துள்ளார்.
மகிழ்ச்சியில் மக்கள் (Happy people)
அதில் 52 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதை உறுதி படுத்தினார்.
இதனை அடுத்து அவர் அரசிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில் இந்த தொகையில் சிலவற்றை எங்களுக்கு தாருங்கள், இதனால் எங்கள் வாழ்நாள் முழுவதும் சுமூகமாக செலவிட முடியும் என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
வீடு கட்ட ரூ.35,000: அரசின் அதிரடி அறிவிப்பு!
கோடிகளைக் குவிக்க உதவும் குப்பைகள் (வாழை நார்) - VAP தயாரிப்பு!
Share your comments