1. Blogs

ரூ.70000 சம்பளத்தில் வங்கி வேலை- கல்வித்தகுதி பட்டப்படிப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Bank job with a salary of Rs. 70,000 - Educational degree!

இந்திய சிறு தொழில்கள் வளர்ச்சி வங்கியில் காலியாக உள்ள 100 உதவி மேலாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்குத் தேவையானக் கல்வித்தகுதி பட்டப்படிப்பு ஆகும். எனவே பட்டப்படிப்பு முடித்த விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் வங்கி மேலாளர் ஆக வேண்டும் என விரும்புபவர்களுக்கு அருமையான வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் டிகிரி முடித்திருந்தாலே ரூ.70000 சம்பளத்தில் உதவி மேலாளர் ஆகலாம். இந்த அருமையான வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.

இந்திய சிறு தொழில்கள் வளர்ச்சி வங்கி (Small Industries Development Bank of India), உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 100 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

உதவி மேலாளர் (Assistant Manager)

காலியிடங்கள்: 100

வயது வரம்பு (Age Limit)

  • விண்ணப்பதாரர் 04.03.2022 அன்று 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

  • SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

கல்வித் தகுதி (Educational Qualification)

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

(Bachelors’ Degree in Law, OR Bachelors’ Degree in Engineering (Preferably Civil / Electrical / Mechanical) OR Master’s Degree in any discipline (Preferably from Commerce/Economics/Management subject) OR CA / CS / CWA / CFA OR Ph.D.)

சம்பளம் (Salary)

தோராயமாக ரூ. 70,000

விண்ணப்பக் கட்டணம் (Fees)

இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.1100 ஆகவும், SC/ST, PWD பிரிவுகளுக்கு ரூ.175 ஆகவும் உள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை(Selection Process)

இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் தேர்வுகளாக மட்டுமே நடைபெறும். நேரடித் தேர்வு கிடையாது.

எழுத்துத் தேர்வு:

எழுத்துத் தேர்வு, இரு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (30), திறனறிதல் (40), கணிதம் (40), கணினி அறிவு (40), மற்றும் பொது அறிவு அல்லது வங்கி தொடர்பான கேள்விகள் (General/ Financial Awareness) (50) என மொத்தம் 160 கேள்விகள் இடம்பெறும். .

அடுத்ததாக விரிவான விடையளித்தல் தேர்வு 50 மதிப்பெண்களுக்கு நடைபெறும். எழுத்துத் தேர்வுக்கான கால அளவு 3 மணி நேரம்.
முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். பின்னர் இறுதி தேர்ச்சிப் பட்டியல் வெளியிடப்பட்டு, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

விண்ணப்பிக்கும் முறை(How to apply)

இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.sidbi.in/en/careers/page/79 அல்லது https://ibpsonline.ibps.in/sidbiofeb22/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி(Last Date)

24.03.2022

மேலும் படிக்க...

200 ஆடுகள், 2500 கிலோ பிரியாணி- சுடச்சுட பிரியாணிப் பிரசாதம்!

நீங்க இந்த Teaயை Try செய்யுங்க - அதிசயிக்க வைக்கும் நன்மைகள்!

English Summary: Bank job with a salary of Rs. 70,000 - Educational degree! Published on: 07 March 2022, 09:05 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.