குளிர்பானம் என நினைத்து மதுவை குடித்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டாஸ்மாக்கால் விளைந்தது (Resulting from Tasmac)
வேலூர் மாவட்டம் திருப்பாகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. 62 வயதான இவர் ஒரு கூலித் தொழிலாளி. மதுப்பிரியரான சின்னசாமி நேற்று முந்தினம் இரவு சின்னசாமி டாஸ்மாக்கில் இருந்து மதுவாங்கி வந்து தனது வீட்டில் வைத்து அருந்தியுள்ளார்.
மது அருந்துவதற்காக முறுக்கு உள்ளிட்ட தின்பண்டங்களையும் வாங்கிவந்து சாப்பிட்டுள்ளார். இதனைக்கண்ட அவரது 5வயது பேரன் ரித்திஷ், சின்னசாமி வைத்த தின்பண்டங்களை சாப்பிட வந்துள்ளார். சிறுவன் தின்பண்டங்களை சாப்பிட்டுக்கொண்டிருக்க சின்னசாமி தான் குடித்தது போக மீதி மதுவை அங்கேயே வைத்துவிட்டு டி.வி பார்க்க சென்றுள்ளார்.
மதுக்குடித்த சிறுவன் (The drunken boy)
வீட்டில் இருந்த சிறுவன் ரித்திஷின் தாயார் விஜயா உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றதால் அதனை பார்க்க வீட்டுவாசலுக்கு சென்றுவிட்டார்.
வீட்டில் தனியாக இருந்த ரித்திஷ் குளிர்பானம் என நினைத்து அவர் வைத்திருந்த மீதி மதுவை எடுத்து அருந்தியுள்ளான். மதுவுக்கு குடித்ததால் சிறுவனுக்கு இருமல் ஏற்பட்டுள்ளது.
விவரம் அறிந்து ஆத்திரமடைந்த விஜயா சின்னச்சாமியை கடுமையாகக் திட்டியுள்ளார். அந்த அதிர்ச்சியில் சின்னசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சின்னசாமியையும், சிறுவன் ரித்திஷையும் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இருவரும் பலி (Both were died)
சின்னசாமியை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலே அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். சிறுவன் ரித்தீஷ், ல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி ரித்தீஷ் பரிதாபமாக உயிரிழந்தான். வேலூர் போலீஸார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மது குடித்து தாத்தா, பேரன் ஆகிய இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசு நடவடிக்கை எடுக்குமா? (Will the government take action?)
தமிழகத்தைப் பொருத்தவரை, வருவாயைக் காரணம் காட்டி, மதுவிற்பனையை மாநில அரசே செய்துவருவதை பல்வேறு தரப்பினரும் கண்டித்த போதிலும், நியாயம் கிடைத்தபாடில்லை. எனவே இந்த மாநிலத்தில் என்று மதுவிலக்கு அமல்படுத்தப்படுகிறதோ, அன்றுதான் மதுதொடர்பான மரணங்கள் முடிவுக்கு வரும்.
மேலும் படிக்க...
எங்களையும் தத்து எடுத்துக்கோங்க ப்ளீஸ்!
அறுவாள் வாங்கக்கூட ஆதார் அட்டையா?- அடக்கொடுமையே!
Share your comments