
Credit : The Financial Express
காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, மது விற்பனைக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் (Local elections)
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 06.10.2021 மற்றும் 09.10.2021 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.
இதைத்தவிர, ஏனைய 28 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு தற்செயல் தேர்தல் 09.10.2021ல் ஒரே கட்டமாகவும் நடைபெற உள்ளது.
வாக்குப்பதிவு (Voting)
முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் 04.10.2021 காலை 10 மணி முதல் 06.10.2021 நள்ளிரவு 12 மணி வரையும், 2ம் கட்ட வாக்குபதிவு மற்றும் தற்செயல் தேர்தல்கள் நடைபெறும் பகுதிகளில் 07.10.2021 காலை 10 மணி முதல் 09.10.2021 நள்ளிரவு 12 மணி வரை வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 12.10.2021 அன்று வாக்கு எண்ணிக்கை மதுவிற்பனை நடைபெறாது.
தேர்தல் ஆணையம் (Election Commission)
இந்தப் பகுதிகளுக்கு அருகில் ஐந்து கிலோ மீட்டர் சுற்றியுள்ள பகுதிகளிலும் மதுக்கடை மற்றும் மதுபான கூடம் மூடியிருக்க உரிய ஆணைகள் வெளியிட தமிழக அரசை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது.
இதன்படி குறிப்பிட்ட இந்த நாட்களில் தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும் அதன் அருகில் உள்ள ஐந்து கிலோமீட்டர் சுற்றியுள்ள பகுதிகளில் பீர் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்யும் மதுக்கடைகள் மற்றும் மதுகூடங்களை மூடுவதற்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மீறினால் தண்டனை (Penalty for violation)
எனவே வாக்குப்பதிவு நாளில் தேர்தல் நடைபெறும் தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நாளில் வாக்குகள் எண்ணப்படும் பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கவும், மது எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது உரிய சட்ட விதிமுறைகளின் படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
இதைச் செய்தால் கொரோனா தீவிரமாகும், மரணமும் வரும்- ஆய்வில் தகவல்!
கொரோனாவுக்கு பலியானவர்கள் குடும்பங்களுக்கு ரூ.50,000: மத்திய அரசு தகவல்!
Share your comments