1. Blogs

இதய மாற்று அறுவை சிகிச்சையில் திருப்புமுனை: மனிதருக்கு பொருத்தப்பட்ட பன்றியின் இதயம்!

R. Balakrishnan
R. Balakrishnan
Pig Heart fitted to human

அமெரிக்காவில், பன்றியின் இதயத்தை 57 வயது நபருக்கு பொருத்தி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவின் மேரிலாந்தை சேர்ந்த டேவிட் பென்னட் என்ற 57 வயது நபருக்கு இதயம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். வேறு இதயத்தை பொருத்தாவிட்டால் மரணம் நிச்சயம் என்ற நிலையில் அவர் இருந்தார்.

பன்றியின் இதயம் (Pig Heart)

இந்நிலையில் பன்றியின் இதயத்தை அவருக்கு பொருத்த மேரிலாந்து மருத்துவ பல்கலைக்கழக மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதற்காக அமெரிக்க சுகாதாரத்துறையின் ஒப்புதலையும் அவர்கள் பெற்றனர். இதையடுத்து மனிதர்களின் உடலுக்கு பொருந்தும் வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் டேவிட் பென்னட்டுக்கு பொருத்தப்பட்டது.

இதய மாற்று அறுவை சிகிச்சை (Heart Transplant Surgery)

இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் பென்னட் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மனிதர்களின் உடல் உறுப்புகளும் பன்றிகளின் உடல் உறுப்புகளும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக உள்ளன. இதனால் பன்றியின் இதயம் ஏற்கனவே மனிதர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த இதயங்கள் மனித உடலுக்கு முழுமையும் பொருந்ததால் அறுவை சிகிச்சைகளில் வெற்றி கிடைக்கவில்லை.
எனவே மனிதர்களின் உடலுக்கு பொருந்தும் வகையில் பன்றியின் இதயத்தில் மரபணு ரீதியிலான மாற்றங்கள் செய்யப்பட்டு உலகிலேயே முதன்முறையாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தற்போது செய்யப்பட்டுள்ளது.

 

இதில் நம்பிக்கை தரும் முடிவு கிடைத்துள்ளதால் சிறுநீரகம் போன்ற பன்றியின் மற்ற உடலுறுப்புகளையும் மரபணு மாற்றம் செய்து மனிதர்களின் உடலில் பொருத்தும் சூழல் ஏற்படும்.
உலகெங்கும் உறுப்பு தானத்திற்காக காத்துள்ள கோடிக்கணக்கான நோயாளிகளுக்கு இது மிகப்பெரும் தீர்வாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க

Be Alert: இந்த ஆரோக்கிய உணவுகளும் ஆபத்தாய் முடிய வாய்ப்பிருக்கு!

வீடுகளுக்கே சென்று கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவக் குழுக்கள்!

English Summary: Breakthrough in Heart Transplant Surgery: Pig Heart Fitted for Human! Published on: 11 January 2022, 01:19 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.