1. Blogs

வீட்டிற்கே வந்து இலவச சிகிச்சை அளிக்கிறது கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ்

KJ Staff
KJ Staff
treatment for ailing cattle

கடந்த 2016ஆம் ஆண்டு கால்நடைகளுக்கு உயிர் காக்கும் அவசர சிகிச்சை அளிப்பதற்கான ஆம்புலன்ஸ் திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் திருச்சி, தஞ்சாவூர், காஞ்சிபுரம், நாமக்கல், மதுரை மாவட்டங்களுக்கு தலா 2 ஆம்புலன்ஸ்கள் வழங்கப்பட்டன. கடந்த 5ஆம் தேதி இந்த திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக மேலும் 22 ஆம்புலன்ஸ்கள் இந்த திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டன. மாவட்டத்திற்கு தலா ஒரு ஆம்புலன்ஸ் வீதம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தும் விதமாக 22 இலவச அவசர கால்நடை மருத்துவ ஊர்திகளை, 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாங்கியிருக்கிறது தமிழக அரசு. இதனை காணொளிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

Animal mobile medical ambulance

ஆம்புலன்ஸ்கான சிறப்பம்சங்கள்

  • 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு கால்நடை வளர்ப்போர் இந்த ஆம்புலன்ஸ் சேவையைப் பெறலாம். பெயர், முழுமையான முகவரி, கால்நடைக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை ஆகியவை குறித்த தெளிவான தகவல்களை தெரிவித்தால் போதும்; வீட்டிற்கே நேரடியாக வந்து இலவசமாக சிகிச்சை வழங்கப்படும்.
  • கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை பொறுத்து உரிய ஆலோசனைகள் வழங்கப்படும் அல்லது மருத்துவ உதவி தேவைப்படும் பட்சத்தில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அவசர ஊர்திகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்படும்.
  • ஆடு, மாடுகள் கன்று ஈனுவதில் சிரம்ம், கருப்பை வெளித் தள்ளுதல், விஷ செடிகளை உட்கொண்டதால் ஏற்படும் பிரச்சினை, பாம்பு உள்ளிட்ட விஷ பிராணிகளால் ஏற்படும் பாதிப்புகள், விபத்துகளால் ஏற்படும் காயம் உள்ளிட்டவற்றிற்கு கால்நடைகளின் இருப்பிடத்துக்கே நேரடியாகச் சென்று இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும்.
  • இந்த ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஒரு கால்நடை மருத்துவர், கால்நடை உதவியாளர், ஓட்டுநர் ஆகியோர் பணியில் இருப்பர்.
  • இந்த வாகனத்தில் குளிர்சாதன வசதி, மீஒலி ஆய்வு இயந்திரம் (அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர்), ஜெனரேட்டர், மாடுகளை படுத்த நிலையிலோ அல்லது நின்ற நிலையிலோ எடுத்துச் செல்ல வசதியாக ஹைட்ராலிக் லிப்ட் மற்றும் அவசர கால சிகிச்சைகளுக்குத் தேவைப்படும் அனைத்து உபகரணங்கள், மருந்துகள் உள்ளன.
  • பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மேல் சிகிச்சை தேவை என மருத்துவர் கருதினால், கால்நடையை அதே வாகனத்தில் கொண்டு சென்று அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் சேர்த்து தொடர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.

சி. அலிமுதீன்
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை-07.

Dr. ச. பாவா பக்ருதீன்
கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி,
குரு அங்கத்தேவ் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், லூதியானா, பஞ்சாப்-141001

English Summary: Call 1962, any emergency for livestock: Tamil Nadu Govt Launches Animal Mobile Medical Ambulance

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.