Krishi Jagran Tamil
Menu Close Menu

45 நிமிடத்தில் கடன் வழங்கும் SBI! - உங்களை தேடி வரும் சூப்பர் திட்டம்!

Thursday, 22 October 2020 08:40 PM , by: Daisy Rose Mary

இந்த கொரோன ஊரடங்கு மற்றும் நெருக்கடி காலத்தில் மக்களின் அவசரகால பணத் தேவையைக் கருத்தில் கொண்டு, SBI Emergency Loan Scheme என்ற கடன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் வெறும் 45 நிமிடங்களில் ரூ.5 லட்சம் வரையில் வாடிக்கையாளர்கள் கடன் பெறலாம்.

நெருங்கி வரும் பண்டிக்கைகாலத்தையொட்டி கொரோனா ஊரடங்கும் தளர்த்தப்பட்டு வருகிறது. மக்களும் மெல்ல மெல்ல சகஜ நிலைக்கு திரும்பி வருகின்றனர். நவராத்திரி, தீபாவளி என பண்டிகைக் காலங்களும் நெருங்கிவருவதால் பல்வெறு ஆன்லைன் ஷாப்பிங் மையங்கள் சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்துள்ளன. இதனால் மக்களிடையே பணப்புழக்கமும் அதிகரித்து வருகிறது. இதேபோல், எஸ்.பி.ஐ வங்கியும் சிறப்பு அவசரகால கடன் திட்டதையும் அறிவித்துள்ளது.

எஸ்.பி.ஐ., அவசரகால கடன் திட்டம் (SBI Emergency Loan Scheme)

இந்த திட்டத்தில் வெறும் 45 நிமிடங்களில் ரூ.5 லட்சம் வரையில் வாடிக்கையாளர்கள் கடன் பெறலாம். இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், இக்கடனுக்கான மாதத் தவணையை 6 மாதம் கழித்துச் செலுத்த தொடங்கலாம் என்றும் எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் நிதி நெருக்கடி இருக்கும் சமயத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டம் வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது.

வட்டி விகிதம் & தகுதி

இந்த அவசரகால கடன் திட்டத்துக்கான வட்டி விகிதம் 10.5% சதவீதமாகும். இது மற்ற தனிநபர் கடன்களுக்கான வட்டி விகித்தை விடவும் குறைவுதான். இக்கடன் வசதியைப் பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் எஸ்.பி.ஐ., வங்கியின் யோனோ ஆப் (YONO App) மூலமாகவும் விண்ணப்பம் செய்து பெறலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே வெறும் 45 நிமிடங்களில் கடனைப் பெற முடியும். இக்கடனைப் பெற தகுதியான வாடிக்கையாளர்கள் அவர்களது மொபைல் எண்ணில் இருந்து ’567676’ என்ற எண்ணுக்கு PAPL என்று டைப் செய்து, எஸ்பிஐ வங்கி கணக்கின் கடைசி நான்கு இலக்க நம்பரை டைப் செய்து எஸ்எம்எஸ் (SMS) அனுப்புவதன் மூலம் கடன் பெற முடியுமா என தெரிந்து கொள்ள முடியும்.

விண்ணப்பிப்பது எப்படி?

 • எஸ்பிஐ வங்கியின் இந்த அவசரக் காலக் கடனைப் பெறுவதற்கு YONO App மூலம் எளிதாக விண்ணப்பிக்கலாம்.

 • ஸ்மார்ட்போனில் YONO SBI App பதிவிறக்கவும் செய்து, அதில் Pre-approved Loan என்ற வசதியைத் தேர்வு செய்ய வேண்டும்.

 • அதன் பின்னர் எவ்வளவு கடன் தேவை, அதனை எவ்வளவு காலத்தில் திருப்பிச் செலுத்த முடியும் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.

 • அதன் பின்னர் வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு எஸ்பிஐ வங்கியிடமிருந்து OTP எண் வரும்.

 • அதைப் பதிவு செய்த பின்னர் தேர்வு செய்யப்பட்ட கடன் தொகை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

 • இந்த திட்டம் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே. கூடுதல் தகவல்களுக்கு அருகில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியை தொடர்புகொள்ளுங்கள்.

மேலும் படிக்க..

ABVKY : அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா மூலம் வேலை இழந்தவர்கள் சம்பளம் பெறுவது எப்படி?

ஒரு லட்சம் முதலீடு செய்து 2 லட்சம் திரும்பி பெறலாம்!! 100% லாபம் தரும் கிசான் விகாஸ் பத்திர திட்டம் - மூலம் விபரம் உள்ளே!!

ரூ.5000 வேண்டுமா? ரொம்ப சிம்பிள் - உங்கள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்திடுங்கள் போதும்!

 

State Bank of India SBI YONO APP வங்கி கடன் Sbi emergency loan scheme emergency loan
English Summary: Celebrate this festival season with Sbi Emergency loan scheme, we can get within 45 minutes all details inside

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

 1. நிவர் புயல் பாதிப்பு : பயிர் சேதம் கணக்கெடுப்பு துவக்கம்!!
 2. 10,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்பு உருவாக்கும் முயற்சி : தேன் உழவர் உற்பத்தியாளர் அமைப்பு துவக்கம்!!
 3. ஓசூரில் மாறி வரும் காலநிலை! குளிர்கால நோய்கள் தாக்குவதால் ரோஜா விவசாயிகள் கவலை!
 4. மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரம் அரசு பரிசீலிப்பதாக வேளாண்துறை தகவல்!!
 5. நிவர் புயல் எதிரொலி : சூறைக்காற்றில் சிக்கிய வேளாண் பயிர்கள் - விவசாயிகள் வேதனை!!
 6. தேசிய பால் தினம் 2020 : வெண்மைப் புரட்சியின் தந்தை வர்கீஸ் குரியன் குறித்து தெரியுமா உங்களுக்கு!!
 7. கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளும் கடைசி நபராக நான் இருக்க விரும்புகிறேன்- ஜக்கி வாசுதேவ்!
 8. பயிர் கடன் பெறுவது எப்படி? பயிர் கடன் தரும் வங்கிகள் என்னென்ன? முழு விவரம் உள்ளே!!
 9. Niver Cyclone : அதிகாலையில் கரையைக் கடந்தது - 140 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்றுடன் கனமழை- வெள்ளத்தின் பிடியில் தமிழகம்!
 10. அதிதீவிர புயலாக மாறியது நிவர்; மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்கிறது!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.