1. Blogs

Central Vista- புதிய நாடாளுமன்றத்தில் இவ்வளவு வசதி இருக்கா?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Central Vista plan- India's New Parliament Building features here

இந்தியாவின் ஐனநாயக மாண்பை நிலைநாட்டும் இடமாக திகழ்வது நாடாளுமன்றம். இந்நிலையில் Central Vista திட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நாளை திறந்து வைக்க உள்ளார்.

தற்போது செயல்பாட்டில் இருக்கும் பழைய நாடாளுமன்றம் கவுன்சில் ஹவுஸ் என்ற பெயரில் ஆங்கிலேய கட்டிடக் கலைஞர்களான சர் எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரால் (1921-1927) கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் போதுமான இட வசதி இல்லை என்பதை தாண்டி, தற்போதைய காலத்திற்கு ஏற்ப நவீன வசதிகளை ஏற்படுத்தும் வகையில் வலுவாக இல்லை எனவும் கூறப்பட்டு வந்தது.

இதனைத் தொடர்ந்து கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றத்தின் சிறப்பம்சம் என்னவெல்லாம் என்பதை இங்கே காணலாம்.

இந்தியாவின் தலைநகரான டெல்லியின் மையத்தில் 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் நான்கு மாடிகள் உயரம் கொண்ட வகையில் கட்டப்பட்டுள்ளது புதிய நாடாளுமன்றம். பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசாங்கத்தின் லட்சியமான Central Vista திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார்.

இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வடிவமைக்கும் பொறுப்பு அகமதாபாத்தை சேர்ந்த HCP Design Planning Private Limited நிறுவனத்திற்கு பல கட்ட ஏலத்திற்கு பிறகு வழங்கப்பட்டது. இந்த கட்டிடம் டாடா குழுமத்தால் ரூ.971 கோடி மதிப்பீட்டில் இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

Central Vista திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள தகவலின் படி இந்த புதிய பாராளுமன்ற கட்டிடத்தினை கட்டுவதற்கு 26,045 மெட்ரிக் டன் எஃகு, 63,807 மெட்ரிக் டன் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டுள்ளதாம்.

பழைய நாடாளுமன்ற கட்டிடத்துடன் ஒப்பீடுக்கையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பன்மடங்கு இருக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி பழைய நாடாளுமன்றத்தில் லோக்சபாவில் 552 இருக்கைகள் இருந்த நிலையில், புதிய நாடாளுமன்றத்தில் 888 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் பழைய ராஜ்யசபாவில் 245 எம்.பிக்கள் அமரும் வகையில் இருந்த நிலையில் தற்போது 384 எம்.பிக்கள் வரை அமரும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

புதிய லோக்சபாவின் வடிவமைப்பானது, பழைய லோக்சபாவை விட தோராயமாக மூன்று மடங்கு பெரியது. மேலும் புதிய லோக்சபாவானது இந்தியாவின் தேசிய பறவையான மயிலினை முன்மாதிரியாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேப்போல் புதிய இராஜ்யசபாவானது இந்தியாவின் தேசிய மலரான தாமரையினை முன்மாதிரியாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாளை இக்கட்டிடத்தினை பிரதமர் மோடி திறந்து வைக்கும் நிலையில், எனது நாடாளுமன்றம்- எனது பெருமை (#MyParliamentMyPride) என்கிற ஹேஸ்டாக் உடன் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் வீடியோவினை அனைவரும் பகிர பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் காண்க:

தொடரும் வெப்ப சலனம்- இந்த 12 மாவட்டங்களில் கனமழை கொட்டுமாம்!

English Summary: Central Vista plan- India's New Parliament Building features here Published on: 27 May 2023, 03:54 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.